உள்ளடக்கத்துக்குச் செல்

இசுட்ரோன்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம்
38Sr
Ca

Sr

Ba
ருபீடியம்இசுட்ரோன்சியம்இயிற்றியம்
தோற்றம்
வெள்ளி உலோக நிறம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் இசுட்ரோன்சியம், Sr, 38
உச்சரிப்பு /ˈstrɒnʃ[invalid input: '(i)']əm/
STRON-sh(ee)-əm;
/ˈstrɒntiəm/
STRON-tee-əm
தனிம வகை காரக்கனிம மாழைகள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 25, s
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
87.62
இலத்திரன் அமைப்பு [Kr] 5s2
2, 8, 18, 8, 2
Electron shells of Strontium (2, 8, 18, 8, 2)
Electron shells of Strontium (2, 8, 18, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு வில்லியம் குருயிக்சாங்க் (1787)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
ஹம்பிரி டேவி (1808)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 2.64 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 2.375 g·cm−3
உருகுநிலை 1050 K, 777 °C, 1431 °F
கொதிநிலை 1650 K, 1377 °C, 2511 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 7.43 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 136.9 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 26.4 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 796 882 990 1139 1345 1646
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 2, 1[1] (கார ஆக்சைடு)
மின்னெதிர்த்தன்மை 0.95 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 549.5 kJ·mol−1
2வது: 1064.2 kJ·mol−1
3வது: 4138 kJ·mol−1
அணு ஆரம் 215 பிமீ
பங்கீட்டு ஆரை 195±10 pm
வான்டர் வாலின் ஆரை 249 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
இசுட்ரோன்சியம் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு paramagnetic
மின்கடத்துதிறன் (20 °C) 132 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 35.4 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 22.5 µm·m−1·K−1
யங் தகைமை 15.7 GPa
நழுவு தகைமை 6.03 GPa
பாய்சான் விகிதம் 0.28
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
1.5
CAS எண் 7440-24-6
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இசுட்ரோன்சியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
82Sr செயற்கை 25.36 d ε - 82Rb
83Sr செயற்கை 1.35 d ε - 83Rb
β+ 1.23 83Rb
γ 0.76, 0.36 -
84Sr 0.56% - β+β+ 1.7867 84Kr
85Sr செயற்கை 64.84 d ε - 85Rb
γ 0.514D -
86Sr 9.86% Sr ஆனது 48 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
87Sr 7.0% Sr ஆனது 49 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
88Sr 82.58% Sr ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
89Sr செயற்கை 50.52 d ε 1.49 89Rb
β 0.909D 89Y
90Sr trace 28.90 y β 0.546 90Y
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
·சா

இசுட்ரோன்சியம் அல்லது இசுட்ரான்சியம் (ஆங்கிலம்: Strontium (IPA: /ˈstrɒntiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 38; இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Sr. இது ஒரு காரக்கனிம மாழைகள் வகையைச் சேர்ந்த வெள்ளி போல வெண்மை அல்லது மென் மஞ்சள் நிறத் தோற்றம் தரும் ஒரு தனிமம். இது இயற்கையில் செலஸ்டைன் மற்றும் இசுட்ரோன்சியனைட் என்னும் கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது. காற்றில் படுமாறு வெளியிடப்பட்டால் இதன் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இத் தனிமம் வேதியியல் வினை விறுவிறுப்பு கொண்டது. இது கால்சியத்தைவிட மென்மையான (மெதுமையான) பொருள், நீருடன் வேதியியல் வினைப்படுவதில் கால்சியத்தைவிடவும் கூடிய விறுவிறுப்புடையது (இவ்வினையில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடும் ஐதரசனும் உருவாகின்றது). காற்றில் எரியும் பொழுது இது இசுட்ரோன்சியம் ஆக்சைடும், இசுட்ரோன்சியம் நைட்ரைடும் விளைவிக்கின்றது, ஆனால் இசுட்ரோன்சியம் நைட்ரைடு 380 °C க்குக் கீழே நைட்ரஜனுடன் வினைப்படுவதில்லையாதலால், அறைவெப்பநிலையில் ஆக்ஸைடு மட்டுமே உருவாகின்றது. ஆக்ஸைடாகாமல் இருக்க மண்ணெணெய் (கெரோசின்)க்கு அடியில் முழுகி வைத்திருப்பது வழக்கம். நுண் பொடியாக உள்ள இசுட்ரோன்சியம் காற்றில் தன்னியல்பாக தீப்பற்றும். அது எரியும் பொழுது குருதிச் சிவப்பான நிறத்தில் எரியும். இதன் உப்புகளை வானவேடிக்கை காட்சிகளில் பயன்படும் மத்தாப்பு போன்ற அழகு தீப்பொறிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்துவர்.

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ரோன்சியம்&oldid=3952906" இலிருந்து மீள்விக்கப்பட்டது