இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியம்(II) பெர்குளோரேட்டு; இசுட்ரோன்சியம் இருபெர்குளோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13450-97-0 | |
ChemSpider | 55515 |
EC number | 236-614-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61607 |
| |
பண்புகள் | |
Sr(ClO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 286.51 கி/மோல் |
தோற்றம் | வெண் தூள் அல்லது நிறமற்ற படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு (Strontium perchlorate) என்பது Sr(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மையான தூளாக அல்லது நிறமற்ற படிகங்களாக இச்சேர்மம் காணப்படுகிறது.
வலிமையான ஆக்சிசனேற்றியான இது சிவப்பு நிற தீப்பிழம்புகளை அளிக்கிறது. வெடிப்பறிவியல் துறையில் இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மிகவும் பொதுவான இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு இத்துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. திட-உந்துசக்தி இராக்கெட்டுகளில் திரவ ஊசி உந்துதல் திசையன் கட்டுப்பாடு அமைப்பில் நிலையான முனை மூலம் கட்டுப்பாட்டை செயல்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.
ஐப்போகுளோரைட்டுகளுடன் இசுட்ரோன்சியம் குளோரேட்டைச் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம்.
கால்சியம் பெர்குளோரேட்டுடன் ஒப்பிடக்கூடிய வகையிலான Pbca என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் இசுட்ரோன்சியம் பெர்குளோரேட்டு படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hyoung, Jooeun; Lee, Hyeon Woo; Kim, So Jin; Shin, Hong Rim; Hong, Seung-Tae (2019). "Crystal structure of strontium perchlorate anhydrate, Sr(ClO4)2, from laboratory powder X-ray diffraction data". Acta Crystallographica Section E 75 (4): 447–450. doi:10.1107/S2056989019003335. பப்மெட்:31161054.