உள்ளடக்கத்துக்குச் செல்

தெர்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெர்பியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
65 கடோலினியம்தெர்பியம்டிஸ்ப்ரோசியம்
-

Tb

Bk
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
தெர்பியம், Tb, 65
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளிபோன்ற வெண்மை
அணு நிறை
(அணுத்திணிவு)
158.92535(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f9 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 27, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
8.23 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
7.65 g/cm³
உருகு
வெப்பநிலை
1629 K
(1356 °C, 2473 °F)
கொதி நிலை 3503 K
(3230 °C, 5846 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
10.15 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
293 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
28.91 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1789 1979 (2201) (2505) (2913) (3491)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்சைடு
நிலைகள்
3, 4
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு ? 1.2 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 565.8 kJ/(mol
2nd: 1110 kJ/mol
3rd: 2114 kJ/mol
அணு ஆரம் 175 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
225 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை இரும்புக்காந்தத் தன்மை
உறைந்த
கார்பன்-டை-ஆக்ஸைடு-இல்
dry ice [1]
மின்தடைமை (r.t.) (α, பல்படிகம்)
1.150 µΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 11.1
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (r.t.) (α, பல்படிகம்)
10.3 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2620 மீ/நொடி
யங்கின் மட்டு (α form) 55.7 GPa
Shear modulus (α form) 22.1 GPa
அமுங்குமை (α form) 38.7 GPa
பாய்சான் விகிதம் (α form) 0.261
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
863 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
677 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-27-9
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: தெர்பியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
157Tb செயற்கை 71 y ε 0.060 157Gd
158Tb செயற்கை 180 y ε 1.220 158Gd
β- 0.937 158Dy
159Tb 100% Tb ஆனது 94 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

தெர்பியம் (ஆங்கிலம்: Terbium (ˈtɝbiəm) அணுவெண் 65 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 94 நொதுமிகள் உள்ளன. தெர்பியத்தின் வேதியியல் குறியீடு Tb ஆகும்.

குறிப்பிடத்தக்க பண்புகள்

[தொகு]

தெர்பியம் பார்ப்பதற்கு வெள்ளிபோன்ற வெண்மையாக இருக்கும் ஒரு காரக்கனிம மாழை. தெர்பியம் வளைந்து நெளிந்து கொடுக்ககூடிய தன்மையும், தகடாகும் தன்மையும் கொண்ட ஒரு மாழை. எளிதாக கத்தியால் நறுக்கும் அளவுக்கு மெதுவானது. காற்றில் ஓரளவிற்கு நிலையான (ஆக்ஸைடாகாத) தன்மை உடையது. இரு வேறு படைகவடிவுகள் கொண்ட பொருள். ஒரு படிகநிலையில் இருந்து மற்றதற்கு மாறும் வெப்பநிலை 1289 °C.

பயன்பாடுகள்

[தொகு]

கால்சியம் ஃவுளூரைடு, கால்சியம் டங்ஸ்டேட், ஸ்ட்ரான்சியம் மாலிப்டேட் ஆகிய பொருட்களால் செய்யப்படும் எதிர்மின்னிக்கருவிகளில் புறவூட்டுப் பொருளாக தெர்பியம் பயன்படுகின்றது. வேதியியல் வினையால் இடுபொருளைக் கொண்டு மின்னாற்றலாக மாற்றும் சில உயர்வெப்பநிலையில் இயங்கும் இடுமின்கலங்களில் (fuel cell) நிலைப்படுத்தும் பொருளாக சிர்க்கோனியம் ஆக்ஸைடுடன் (ZrO2) தெர்பியம் பயன்படுகின்றது.

தெர்பியம் ஆக்ஸைடு பச்சை நிறம் தரும் ஒளிரியாக புளோரசன்ட் விளக்குகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் பயன்படுகின்றது.

வரலாறு

[தொகு]

1843 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டு வேதியியலாளர் கார்ல் குஸ்டாஃவ் மோசான்தெர் (Carl Gustaf Mosander) இயிற்றியம் ஆக்ஸைடு (Y2O3) -இல் ஒரு மாசுப் பொருளாக (புறப்பொருளாக) கண்டறிந்தார். தற்கால மின்மவணு பரிமாற்ற முறை கண்டுபிடிக்கும் வரையில் இது தனியாக பிரித்தெடுக்கப்படவில்லை.

தெர்பியம் அரிதில் கிடைக்கும் தனிமம் என்னும் வகையை சேர்ந்ததென்று குறிப்பிட்டிருந்தாலும், வெள்ளி, பாதரசம் ஆகிய தனிமங்களைவிட அதிக அளவில் புவியில் கிடைக்கின்றது. அரிதில் பிரித்தெடுக்கப்பட்டு தனிமமாக உணர்ந்த பொருட்களில் ஒன்று என்று முன்காலத்து வேதியியலாலர் கருதினர் என்பர். .

கிடப்பும் மலிவும்

[தொகு]

தெர்பியம் இயற்கையில் தனியாக தனிமமாகக் கிடைப்பதில்லை. ஆனால் பல கனிமங்களில் கலந்துள்ள ஒரு பொருளாகக் கிடைக்கின்றது. இவ்வகையான கனிமங்களில் சில செரைட்டு, கடோலினைட்டு, மோனாசைட்டு, செனோனைட்டு, யூக்செனைட்டு முதலியன சில. இவற்றிலும் 1% க்கும் குறைவாகவே தெர்பியம் உள்ளது. தெற்கு சீனாவில் கிடைக்கும் களிமன் பொருட்களில் கிடைக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெர்பியம்&oldid=3978400" இலிருந்து மீள்விக்கப்பட்டது