உள்ளடக்கத்துக்குச் செல்

ரோகின்டன் பாலி நரிமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோகின்டன் பாலி நரிமன்
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்
பதவியில்
7 சூலை 2014 – 12 ஆகஸ்டு 2021
பரிந்துரைப்புஇராஜந்திர மல் லோதா
நியமிப்புபிரணப் முகர்ஜி
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்
பதவியில்
27 சூலை 2011 – 4 பிப்ரவரி 2013
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 ஆகத்து 1956 (1956-08-13) (அகவை 68)[1]
மும்பை, பம்பாய் மாகாணம்,
(தற்போது மகாராட்டிரம், இந்தியா
துணைவர்சனயா ஆர். நரிமன் [2]
பெற்றோர்
முன்னாள் கல்லூரிசிறீ ராம் வணிகவியல் கல்லூரி (பி. காம்., ஆனர்ஸ்)
தில்லி பல்கலைக்கழகம் (எல் எல் பி)
ஹாவர்டு சட்டப் பள்ளி (எல் எல் எம்)

ரோகின்டன் பாலி நரிமன் (பிறப்பு: 13 ஆகத்து, 1956) இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.[3] இவர் பாலி சாம் நரிமன் என்னும் புகழ் பெற்ற சட்ட அறிஞரின் மகன் ஆவார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மணிப்பள்ளி நாராயண ராவ் வெங்கடாச்சலய்யா என்பவர் ரோகின்டன் பாலி நாரிமனை உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக அமர்த்தினார். முப்பது ஆண்டுகள் சட்டத் துறையில் அறிவும் அனுபவமும் கொண்டவர்.

கல்வியும் தொழிலும்

[தொகு]

ரோகின்டன் பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்தார். வணிகவியல் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் தில்லிப் பல்கலைக் கழகக் கல்லூரிகளிலும் பயின்றார். 1980-81 இல் ஆர்வர்டு சட்டப் பள்ளியில் படித்து எல்.எல்.எம். பட்டமும் பெற்றார். மும்பை உயர் நீதி மன்றத்தில் 3 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணி புரிந்தார். உச்சநீதி மன்ற நீதிபதி வெங்கடாசலையா ரோகின்டனின் திறமையைக் கருத்தில் கொண்டு சீனியர் கவுன்சலாக இவரை அமர்த்தினார். அப்போது இருந்த வயது வரம்பு விதியை மாற்றி இவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 2011-13 ஆண்டுகளில் இந்தியாவின் சொலிசிடர் செனரல் பதவியை வகித்தார். 2014 சூலைத் திங்கள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்து வருகிறார்

பிற ஈடுபாடுகள்

[தொகு]

பார்சி மக்கள் பின்பற்றும் சரதுசம் மதக் குருமாருக்குரியத் தகுதிகளைப் பெற்றவர். பார்சிக் கோவில்களில் பூசை செய்வார்.பார்சி இன மக்களுக்குத் திருமணச் சடங்குகளைச் செய்து வைப்பார்.[4]பீத்தோவன் போன்ற மேற்கத்திய இசையைக் கேட்பதில் நாட்டம் கொண்டவர்.

வரலாறு, தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகியத் துறை நூல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டவர். அரசியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள் தொடர்பான பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். நியூயார்க்கு பிலடெல்பியா போன்ற நாடுகளுக்குச் சென்று தம் மதமான சொராஸ்டிரிய மதம், பிற மதங்கள் பற்றிய ஆய்வு உரைகளை ஆற்றியுள்ளார். உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் நல அறக்கட்டளை உருவாக்குவதில் துணை நின்றார்.

மேற்கோள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகின்டன்_பாலி_நரிமன்&oldid=3845062" இலிருந்து மீள்விக்கப்பட்டது