சஞ்சீவ் கண்ணா
சஞ்சீவ் கண்ணா Sanjiv Khanna | |
---|---|
![]() நீதிபதி சஞ்சீவ் கண்ணா | |
51வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 நவம்பர் 2024 | |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
முன்னையவர் | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் 18 சனவரி 2019 – 10 நவம்பர் 2024 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி-தில்லி உயர் நீதிமன்றம் | |
பதவியில் 24 சூன் 2005 – 17 சனவரி 2019 | |
பரிந்துரைப்பு | இரமேஷ் சந்திர லகோதி |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 மே 1960 புது தில்லி, இந்தியா |
முன்னாள் மாணவர் | தில்லி பல்கலைக்கழகம் |
சஞ்சீவ் கண்ணா (Sanjiv Khanna)(பிறப்பு 14 மே 1960) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை தேவ் ராஜ் கண்ணாவும் நீதிபதி பதவியினை வகித்தவர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]1977ஆம் ஆண்டு தில்லியின் பாரகாம்பா சாலையில் உள்ள மாடர்ன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தூய இசுடீபன் கல்லூரியில் 1980ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் சட்டம் பயின்றார். இவரது தந்தை நீதிபதி தேவ் ராஜ் கண்ணா 1985-ல் தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இவரது தாயார் சரோஜ் கண்ணா தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள சீமாட்டி சிறீராம் கல்லூரியில் இந்தி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
நீதிபதி பணி
[தொகு]1983ஆம் ஆண்டு தில்லி வழக்குரைஞர் கழகத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பயிற்சி செய்துவந்தார். 24 சூன் 2005 அன்று, இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டு 20 பிப்ரவரி 2006 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 18 சனவரி 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். தலைமை நீதிபதி தனஞ்சய சந்திரசூட் ஓய்வு பெற்ற பிறகு இவர் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார். கண்ணா, இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதிபதி ஹன்ஸ் ராஜ் கண்ணாவின் மருமகன் ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CJ & Sitting Judges". Delhi High Court. Retrieved 12 January 2019.
- ↑ "SC recommends names of Justices Maheshwari, Sanjiv Khanna as top court judges". தி எகனாமிக் டைம்ஸ். Retrieved 12 January 2019.
- ↑ "7 Next CJIs". Supreme Court Observer. Archived from the original on 28 December 2021. Retrieved 24 November 2021.