இரமேஷ் சந்திர லகோதி
இரமேஷ் சந்திர லகோதி | |
---|---|
இரமேஷ் சந்திர லகோதி பதவியேற்பின் போது | |
35ஆவது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 1 சூன் 2004 – 31 அக்டோபர் 2005 | |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
முன்னையவர் | எஸ். ராஜேந்திர பாபு |
பின்னவர் | யோகேசு குமார் சபர்வால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] குணா, மத்தியப் பிரதேசம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 1 நவம்பர் 1940
இறப்பு | மார்ச்சு 23, 2022 புது தில்லி, இந்தியா | (அகவை 81)
துணைவர் | கவுசல்யா |
இரமேஷ் சந்திர லகோதி (Ramesh Chandra Lahoti)(1 நவம்பர் 1940 - 23 மார்ச் 2022)[2][3] இந்தியாவின் 35வது தலைமை நீதிபதி ஆவார். இவர் 1 சூன் 2004 முதல் நவம்பர் 1, 2005 வரை பணியாற்றினார்.
கல்வி
[தொகு]லகோதி 1960-ல் மத்தியப் பிரதேச மாநிலத்தில்குணா மாவட்டத்தில் வழக்கறிஞர் குழுவில் சேர்ந்து 1962-ல் வழக்கறிஞராக பணியினைத் தொடர்ந்தார். ஏப்ரல் 1977-ல், இவர் மாநில உயர் நீதித்துறை சேவைக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றிய பிறகு, மே 1978-ல் தனது பணியினை ராஜினாமா செய்துவிட்டு, உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியினைத் தொடர்ந்தார்.[3] மே, 3 1988-ல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார். ஆகத்து 4, 1989-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். லகோதி 1994 பிப்ரவரி 7 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இவர் 9 திசம்பர் 1998 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[4] சுமார் 17 மாதங்கள் இப்பதவியிலிருந்த லகோதி தனது 65ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.
சாதனைகள்
[தொகு]நீதிபதி லகோதி ஓர் பிரபலமான நீதிபதியாவார். சமீபத்திய ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக நீண்ட காலம் பணியாற்றியவராக அறியப்படுகின்றார்.
நவம்பர் 2004-ல், தலைமை நீதிபதி லகோதி, இந்தியாவில் நீதித்துறை 'தூய்மையானது' என்று அறிவித்ததன் மூலம், நீதித்துறைக்குள் அதிகரித்து வரும் ஊழல் குறித்து கவலை தெரிவித்த இவரது முன்னோடிகளில் பலரை முறியடித்தார். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள தவறான நீதிபதிகள் பற்றி ஊடகங்களில் அடிக்கடி அம்பலப்படுத்தப்பட்டதன் வெளிச்சத்தில் இது ஒரு வியக்கத்தக்க அறிக்கையாக இருந்தது.
நீதிமன்ற இடமாற்றங்களைத் தலைமை நீதிபதி கையாண்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிப்ரவரி 2005-ல், தலைமை நீதிபதி பி. கே. ராய் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதி லகோதியின் கண்காணிப்பில் மாற்றப்பட்டார்.[5]
மக்கள்தொகை கட்டுப்பாடு
[தொகு]இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காத அரியானா சட்டத்தை நீதிபதி லகோதி உறுதி செய்தார். தனியுரிமை மற்றும் மதத்திற்கான உரிமை அடிப்படையிலான வாதங்களை இவர் நிராகரித்தார்.[6]
புலம்பெயர்ந்தோர்
[தொகு]இவர் அசாமுக்குப் புலம்பெயர்ந்தோர் மீதான சட்டவிரோத குடியேற்றவாசிகள் (தீர்ப்பாயங்கள் மூலம் தீர்மானித்தல்) சட்டத்தை ரத்து செய்தார்.[6]
ஓய்வுக்குப் பிந்தைய நடவடிக்கைகள்
[தொகு]லகோதி இந்தியப் பன்னாட்டு மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவில் இருந்தார்.[7] நீதிபதி லகோதி, மானவ் ரச்னா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையின் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon'ble Mr. Justice R.C. Lahoti". Former Hon'ble Chief Justices' of India. Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
- ↑ "Former Chief Justice of India RC Lahoti Dies at 81".
- ↑ 3.0 3.1 "R. C. Lahoti (CJI)". Supreme Court of India. Archived from the original on 2 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-02-06.
- ↑ "Justice R C Lahoti". Delhi High Court. Archived from the original on 22 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-02-06.
- ↑ "Nariman raises Roy's transfer issue with CJI". The Tribune. http://www.tribuneindia.com/2005/20050930/nation.htm#1.
- ↑ 6.0 6.1 "Chief Justice Lahoti: Quietly assertive". Rediff.com. http://www.rediff.com/news/2005/aug/29spec2.htm.
- ↑ "IIMUN: Advisor Board". www.iimun.in. 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-12-04.