மைசூர் நகர்புற மேம்பாட்டுக் குழுமம்
வகை | நகர்புற மேம்பாட்டு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 16 மே 1988 |
தலைமையகம் | மைசூர், கர்நாடகம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | மைசூர் மாவட்டத்திலுள்ள மைசூர், ஹூடஹள்ளி, சிறீராமபுரா, போகடி, கடகோலா, ரமணஹள்ளி பகுதிகள் மற்றும் மாண்டிய மாவட்டத்திலுள்ள நஞ்சன்கூடு & சிறீரங்கப்பட்டினப்பட்டினம் தாலுகா பகுதிகள் |
முதன்மை நபர்கள் | தலைவர் & ஆணையாளர் |
இணையத்தளம் | http://www.mudamysore.gov.in/ |
மைசூர் நகர்புற மேம்பாட்டு குழுமம் (Mysore Urban Development Authority (சுருக்கமாக:MUDA), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தின் மைசூர் நகர்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிறுவனம் ஆகும்.[1]கர்நாடக அரசு 16 மே 1988 அன்று இந்நிறுவனத்தை நிறுவியது. [2][3]
மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனம், மைசூர் நகரத்துடன் ஹூட்டஹள்ளி, சிறீராமபுரா, போகாடி, கடக்கோலா, ரமணஹள்ளி மற்றும் சில புறநகர் பகுதிகளைக் கொண்டு, 1,060,120 மக்கள் தொகையுடன், 286 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அளவிற்கு விரிவாக்கம் செய்தது.[4][5][6][7][8][9][10]மைசூர்-நஞ்சன்கூடு பெருநகரத்தை 509 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அளவில், 2031ஆம் ஆண்டிற்குள் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
வளர்ச்சித் திட்டங்கள்
[தொகு]மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனம் (MUDA) பெருநகர மைசூர் கட்டமைப்பிற்கு கீழ் கண்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளது. [11]
- வெளிப்புற சுற்றுச் சாலை
- ஹிங்கல் பறக்கும் பாலம்
- விஜயநகர்
- ஜெ பி நகர்
- தேவனூர் மனைத் திட்டம்
- சத்ஹள்ளி மனைத் திட்டம்
- கியாத்மாரன ஹள்ளி மனைத் திட்டம்
- ஆர். டி. நகர்
துறைகள்
[தொகு]மைசூர் நகர்புற மேம்பாட்டு நிறுவனத்திற்கு கீழ் கண்ட அரசுத் துறைகள் செயலாற்றுகிறது.[12]
- நிலம் கையகப்படுத்தும் துறை
- நகர திட்டமிடல் துறை
- பொறியல் துறை
- மனை ஒதுக்கீடு & பொது நிர்வாகத் துறை
- நிதித் துறை
- சட்டத் துறை
- மக்கள் தொடர்புத் துறை
மைசூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பு மற்றும் பெருநகரப் பகுதி
[தொகு]மைசூர் பெருநகரப் பகுதியில் மைசூர், நஞ்சன்கூடு மற்றும் மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கூடு தாலுகா பகுதிகள் மற்றும் மண்டியா மாவட்டத்தின் சிறீரங்கப்பட்டினம் தாலுகாவின் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
2031ஆம் ஆண்டிற்குள் மைசூர் நகர்புற மேம்பாட்டு பகுதி 509 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 1,696,577 மக்கள் தொகையும் கொண்டிருக்கும்.[13]
படக்காட்சிகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcome to the Official Website of MUDA - Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
- ↑ "About MUDA - Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
- ↑ "Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
- ↑ "Hootagalli CMC and four Town Panchayats formed: Govt. issues Gazette notification". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ Andolana (2020-12-05). "ವಿಸ್ತರಣೆಗೊಂಡಿತು ಮೈಸೂರು ನಗರ ವ್ಯಾಪ್ತಿಯ ಗಡಿ". ANDOLANA (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ "Gazette Notification 1" (PDF). Archived from the original (PDF) on 2020-12-06.
- ↑ "Gazette Notification 2" (PDF). Archived from the original (PDF) on 2021-04-15.
- ↑ "Gazette Notification 3" (PDF). Archived from the original (PDF) on 2021-04-15.
- ↑ "Gazette Notification 4" (PDF). Archived from the original (PDF) on 2020-12-06.
- ↑ "Gazette Notification 5" (PDF). Archived from the original (PDF) on 2020-12-06.
- ↑ "MUDA Projects - Mysuru Urban Development Authority". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
- ↑ "MUDA Departments". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
- ↑ "MUDA Mysore Urban Development Authority Master Plan 2031". www.mudamysore.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.