உள்ளடக்கத்துக்குச் செல்

மேலக்கொடுமலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலக்கொடுமலூர் (Melakodumalur), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த வருவாய் கிராமம் [1] மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[2]மேலக்கொடுமலூர் ஊராட்சி 9 உறுப்பினர்கள் கொண்டது. இங்கு மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.

மேலக்கொடுமலூர், பரமக்குடியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும்; முதுகுளத்தூரிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 425 குடியிருப்புகள் கொண்ட மேலக்கொடுமலூர் வருவாய் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,503 ஆகும். அதில் ஆண்கள் 753 மற்றும் பெண்கள் 750 ஆகும். சராசரி எழுத்தறிவு 71.87%. பட்டியல் சமூகத்தினர் 931 ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலக்கொடுமலூர்&oldid=4111189" இலிருந்து மீள்விக்கப்பட்டது