தேவிபட்டினம்
தேவிபட்டினம் | |
ஆள்கூறு | 9°28′52″N 78°53′54″E / 9.48111°N 78.89833°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | இராமநாதபுரம் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தேவிபட்டினம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4] இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேவி
பட்டினம் உள்ளது. தேவிபட்டினம் ஒரு சிறு துறைமுகமாக விளங்கியது; 1954ஆம் வருடம் இத்துறைமுகம் செயல்படுவது நின்றது. உலகநாயகி அம்மன் கோவில் இங்கு இருப்பதால் இது தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சக்தி பீடமாகும்.[5]
இவ்வூரின் சிறப்பு
[தொகு]கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவக் கிரகங்கள் உள்ளன. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இங்குதான் கடலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு கடலுக்கு அருகில் கடலடைத்த பெருமாள் கோவில் உள்ளது.[6]
தேவிபட்டினம் சக்திபீடம்
[தொகு]தேவிபட்டினம் உலகநாயகி அம்மன் கோவிலை சிலர் சக்தி பீடமென்பர். ஏனெனில் மேரு தந்திரத்தின்படி தேவிகோட்டம் என்பது தேவியின் இடது அக்குள் விழுந்த இடமாகும். மேலும் இதுவே சமஸ்கிருதத்தின் சகாரம் தோன்றிய இடமுமாகும். தேவிகோட்ட பீடத்தின் தேவியின் பெயர் அகிலேஸ்வரி என்று ப்ருஹன் நீல தந்திரம் கூறுகிறது. தமிழ்நாட்டின் தேவிபட்டினத்தில் உலகநாயகி என்ற அம்மன் கோவில் உண்டு. உலகம் என்பதும் அகிலம் என்பதும் ஒன்றேயென்பதால் இதுவே சக்தி பீடமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலில் உள்ள அம்பிகையின் சுயம்பு பல சக்தி பீடங்களில் உள்ள கரும்பாறை அமைப்பில் உள்ளது. ஆகவே பல்வேறு ஆதாரங்களின்படி இந்த இடமே தேவிகோட்டம் என்ற சக்தி பீடம் என்பர். இதை வீரசக்தி பீடம் என்றும் கூறுவர்.[5]
புராணம்
[தொகு]ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என புராணங்கள் கூறுகின்றன.
இதனையும் காண்க
[தொகு]- தேவிப்பட்டிணம் திலகேஸ்வரர் கோயில்
- தேவிப்பட்டிணம் உலகநாயகியம்மன் கோயில்
- தேவிப்பட்டிணம் கடலடைத்த பெருமாள் கோயில்
- தேவிப்பட்டிணம் மாரியம்மன் கோயில்
- தேவிப்பட்டணம் காளியம்மன் கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2012-04-16.
- ↑ 5.0 5.1 http://temple.dinamalar.com/New.php?id=1694
- ↑ தேவிபட்டினம்
இவற்றையும் கான்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிமேப்பியாவில் தேவிபட்டினம் அமைவிடம்
- தல வரலாறு தினமலர்
- அருள்மிகு உலகநாயகி அம்மன் கோவில் - தினமலர்