உள்ளடக்கத்துக்குச் செல்

மேகேதாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகேதாட்டு (Mekedatu) கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஒரு குறுகலான பகுதியை குறிப்பதாகும். இதை ஆடு தாண்டு காவிரி என்றும் அழைப்பர்.[1]

காவிரி ஆறும் ஆர்க்காவதி ஆறும் சங்கமம் என்னுமிடத்தில் இணைகின்றன. இதன் அருகே காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. ஆடு கூட இங்கு காவிரியை தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்கு கன்னடம் மொழியில் மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர் வழங்கலாயிற்று. மேகே - ஆடு , தாட்டு - தாண்டுதல் என பொருள்படும்.

அணை

[தொகு]

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்விடத்தில் கர்நாடக அரசு, புனல் மின் நிலையம் அமைக்க, மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம் செயல்படுத்தி வருவதால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசும் விவசாயிகளும் மேக தாது தடுப்பணைத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமணி
  2. "காவிரியின் குறுக்கே அணை: கர்நாடகம் மும்முரம்". தினமணி. Retrieved 19 நவம்பர் 2014.
  3. "2 புதிய அணை, 4 தடுப்பணை, கூட்டுக் குடிநீர் திட்டம், நீர்மின் நிலையம்: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசின் மெகா திட்டங்கள்". தி இந்து. Retrieved 19 நவம்பர் 2014.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mekedaatu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகேதாட்டு&oldid=3800692" இலிருந்து மீள்விக்கப்பட்டது