முரளி சர்மா
முரளி சர்மா | |
---|---|
2013இல் முரளி சர்மா | |
பிறப்பு | 9 ஆகஸ்ட் 1972 குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | அஸ்வினி கல்சேகர் (தி. 2009) |
முரளி சர்மா (Murali Sharma ; பிறப்பு 9 ஆகஸ்ட் 1972) இவர் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்கு, இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் திரையில் காவல் அதிகாரியாக சித்தரிப்பதில் பரவலாக அறியப்பட்டவர்.[1][2][3][4][5] சர்மா தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி, மலையாளம் போன்ற மொழிகளில் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[6][7]
சர்மா தூர்தர்ஷனின் பால்டன் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். அதில் இவர் கர்னல் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். கன்ஸ் அண்ட் ரோஸஸ், சித்தாந்த், லாகி துஜ்சே லகன், மஹாயக்யா, விராசத், ஜிந்தகி தேரி மேரி கஹானி, ரிஷ்டே, ஹம்னே லீ ஹைன் ஷாபத் , ரங்கீலா ரத்தன் சிசோடியா போன்ற பல்வேறு நாடகத் தொடர்களில் சர்மா தோன்றியுள்ளார்.[2][3]
சொந்த வாழ்க்கை
[தொகு]முரளி சர்மா 9 ஆகஸ்ட் 1972 அன்று ஆந்திராவின் குண்டூரில் பிறந்தார். பின்னர், மும்பையில் வளர்ந்தார்.[8][9] இவரது தந்தை, விருஜ்பூஷன் சர்மா ஒரு மராத்தி, இவரது தாயார் பத்மா சர்மா குண்டூரைச் சேர்ந்த தெலுங்கராவார்.[10] சர்மா தன்னை "பாம்பேவாலா" என்று அழைத்துக் கொள்கிறார். இவர் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவுடன் மும்பையில் உள்ள ரோஷன் தனேஜா நடிப்பு பள்ளியில் நடிப்பு பயின்றார்.[11][12] இவர் நடிகை அஸ்வினி கல்சேகரை மணந்தார்.[13]
சான்றுகள்
[தொகு]- ↑ "Murali Sharma is the most demanded actor in South film industry". Archived from the original on 27 October 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.
- ↑ 2.0 2.1 S. RAVI. "Poised for the big innings". The Hindu.
- ↑ 3.0 3.1 Y. Sunita Chowdhary. "Striving to entertain". The Hindu.
- ↑ "Murli Sharma does a guest appearance in the film 'Gaur Hari Dastan' without any remuneration!". The Times of India.
- ↑ "Murli Sharma". Cine Talkers.
- ↑ "B-Town demand Murali Sharma in cop role". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2 February 2014.
- ↑ "Mahie Gill, Murali Sharma, Deepak Dobriyal are some of the new-age villains in Bollywood". timesofindia-economictimes.
- ↑ "Popular Tollywood actor Murali Sharma turns a year older, here's a look at his spectacular work - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
- ↑ Tanmayi, Bhawana. "Positive roles increased my age on-screen, says Murali Sharma". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
- ↑ "నటుడు మురళీ శర్మకు మాతృ వియోగం!". நமஸ்தே தெலுங்கானா (in தெலுங்கு). 8 June 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
- ↑ "Indian Television Dot Com - "If I had a chocolate face, I would have been driving a Ford Ikon and doing three Balaji shows; two on Star Plus and one on Sony" : Murli Sharma". Indian Television Dot Com. 11 August 2004.
- ↑ Bhandaram, Vishnupriya (16 September 2012). "One shade darker". தி இந்து. Archived from the original on 23 December 2021.
- ↑ "Murli Sharma and wife Ashwini in Poshter Boyz". The Indian Express. 25 July 2014.