மக்னீசியம் சல்பைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
12032-36-9 | |
ChemSpider | 8305407 |
EC number | 234-771-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82824 |
| |
பண்புகள் | |
MgS | |
வாய்ப்பாட்டு எடை | 56.38 கி/மோல் |
தோற்றம் | வெண்மையிலிருந்து செம்பழுப்பு நிறப்பொடி |
அடர்த்தி | 2.84 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,000 °C (3,630 °F; 2,270 K) approx. |
சிதைவடையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஆலைட்டு (கனசதுரம்), cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
கனசதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-347 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
50.3 யூ/மோல் கெ |
வெப்பக் கொண்மை, C | 45.6 யூ/மோல் கெ |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மக்னீசியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கால்சியம் சல்பைடு இசுட்ரோன்சியம் சல்பைடு பேரியம் சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் சல்பைடு (Magnesium sulfide) என்பது MgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். தூய்மையான மக்னீசியம் சல்பைடு வெண்மை நிறப் படிகங்களாகக் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இச்சேர்மம் தூய்மையற்ற நிலையில் கிடைக்கிறது. தூய்மையற்ற மக்னீசியம் சல்பைடு பழுப்பு நிறமாகவும் படிக வடிவமற்றும் காணப்படுகிறது. தொழிற்சாலைகளில் உலோக இரும்பு உற்பத்தி செய்யப்படுகையில் இச்சேர்மம் உருவாக்கப்படுகிறது.
தயாரிப்பு மற்றும் பண்புகள்
[தொகு]கந்தகம் அல்லது ஐதரசன் சல்பைடை மக்னீசியத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் மக்னீசியம் சல்பைடைத் தயாரிக்கலாம். அதிக நிலைப்புத்தன்மை கொண்ட மக்னீசியம் சல்பைடு பாறை உப்பு வடிவமைப்பில் படிகமாகிறது. துத்தநாக பிளெண்ட் எனப்படும் துத்தநாகக் கந்தக அமைப்பு[1] மற்றும் உவுர்ட்சைட் [2] படிக அமைப்பில் படிகமாகின்ற மக்னீசியம் சல்பைடை புறமூலக்கூற்று கற்றை படிகப்படலம் வழிமுறையில் தயாரிக்க முடியும்.
மக்னீசியம் சல்பைடின் வேதிப்பண்புகள் இதனையொத்த சோடியம் சல்பைடு, பேரியம் சல்பைடு அல்லது கால்சியம் சல்பைடு போன்ற அயனிச் சேர்மங்களின் வேதிப்பண்புகளுடன் ஒத்திருக்கிறது. ஆக்சிசனுடன் மக்னீசியம் சல்பைடு வினைபுரிந்து இணையான சல்பேட்டு சேர்மமான மக்னீசியம் சல்பேட்டு உருவாகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் சல்பைடையும் மக்னீசியம் ஐதராக்சைடு|மக்னீசியம் ஐதராக்சைடையும்]] கொடுக்கிறது. [3]
பயன்கள்
[தொகு]அடிப்படை ஆக்சிசன் எஃகு உருவாக்கச் செயல்முறையில் முதலில் நீக்கப்பட வேண்டிய தனிமம் கந்தகமாகும். ஊது உலையில் கிடைக்கும் அசுத்தமான இரும்பில் உள்ள கந்தகத்தை நீக்குவதற்கு பலநூறு கிலோ அளவில் மக்னீசியம் பொடி சேர்க்கப்படுகிறது. மக்னீசியம் சல்பைடு உருவாகி உருகிய இரும்பின் மேல் மிதக்கிறது. பின்னர் இவ்விரும்பில் இருந்து நீக்கப்படுகிறது [4]
MgS சேர்மத்தின் அகன்ற பட்டை இடைவெளி நேரடியான குறைக்கடத்தியாக நீலப்பச்சை உடனொளிர்வைத் தருகிறது[5]. 1900 ஆம் ஆண்டுகளில் இருந்து அறியப்பட்டுள்ள இப்பண்பு குறைந்த அலைநீளம் கொண்ட புறஊதா ஒளி உணரியாகப் பயன்படுகிறது.[6]
தோற்றம்
[தொகு]சில வேதிக் கசடுகளில் பகுதிப்பொருளாக இருப்பதையும் தவிர்த்து MgS ஓர் அரிதான நினின்கெரைட்டு என்ற புவிசாரா கனிமமாக விண்வீழ் கற்களில் காணப்படுகிறது. C/O > 1 அளவிலான சில கார்பன் விண்மீன் வகைகளின் விண்மீன் சூழ் உறைகளிலும் MgS காணப்படுகிறது.[7]
பாதுகாப்பு
[தொகு]MgS சேர்மத்தின் மீது ஈரம்பட நேர்ந்தாலேயே ஐதரசன் சல்பைடை வெளிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ C. Bradford, C. B. O'Donnell, B. Urbaszek, A. Balocchi, C. Morhain, K. A. Prior, and B. C. Cavenett, Appl. Phys. Lett. 76, 3929 (2000).
- ↑ Y. H. Lai, Q. L. He, W. Y. Cheung, S. K. Lok, K. S. Wong, S. K. Ho, K. W. Tam, and I. K. Sou,"Molecular beam epitaxy-grown wurtzite MgS thin films for solar-blind ultra-violet detection", Applied Physics Letters 102, 171104 (2013). http://dx.doi.org/10.1063/1.4803000
- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ Irons, G. A.; Guthrie, R. I. L. "Kinetic aspects of magnesium desulfurization of blast furnace iron" Ironmaking and Steelmaking (1981), volume 8, pp.114-21.
- ↑ Tiede, E. "Reindarstellung von Magnesiumsulfid und seine Phosphorescenz. I (Preparation of pure magnesium sulfide and its phosphorescence. I)" Berichte der Deutschen Chemischen Gesellschaft (1916), volume 49, pages 1745-9.
- ↑ Ying Hoi Lai, Wai-Yip Cheung, Shu-Kin Lok, George K.L. Wong, Sut-Kam Ho, Kam-Weng Tam and Iam-Keong Sou, "Rocksalt MgS solar blind ultra-violet detectors", AIP Advances, 2, 012149 (2012).http://dx.doi.org/10.1063/1.3690124
- ↑ Goebel, J. H., and Moseley, S. H., "MgS Grain Component in Circumstellar Shells," Astrophysical Journal (Letters) 290, L35 (1985)