பேல் பூரி
பேல்பூரி | |
மாற்றுப் பெயர்கள் | பேல் (மகராஷ்டிரா), (குஜராத்), பேல்பூரி (மேற்கு வங்காளம்), பேலா, சுரு மூரி/சுர்முரி (கர்நாடகம்),[1] பேல் (மாகை, போஜ்புரி, மைதிலி, அவாட்தி), பெல்பரி (சில்கட் பகுதி]) |
---|---|
வகை | சிற்றுண்டி, சாட் |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | மகராஷ்டிரா, நேபாளம், குஜராத், ஒடிசா, வங்காளம், மைசூர்,கர்நாடகம் |
முக்கிய சேர்பொருட்கள் | பொரி, sev |
வேறுபாடுகள் | சேவ்பூரி, தகிபேல்பூரி, சேவ் படி சாட் |
இதே போன்ற உணவுகள் | ஜல்முரி |
இந்தியாவில் உருவான சுவையான சிற்றுண்டி பேல் பூரி ஆகும். இது ஒரு வகையான சாட் உணவு. இது அவல்,காய்கறிகள்,புளி சாஸ் (குழம்பு) ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது மொறுமொறுப்பானது.[2][3] பேல் பூரி பெரும்பாலும் கடற்கரை சிற்றுண்டியாக அறியப்படுகிறது. செளபாட்டி, ஜூஹூ மும்பை ஆகிய கடற்கரை உணவுகளுடன் ஒத்ததாக காணப்படுகிறது.[4] விக்டோரியா டெர்மினஸுக்கு (முடிவெல்லைக்கு)அருகிலுள்ள விட்டல் என்ற உணவகத்தில் அதன் தோற்றம் மற்றும் கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு கோட்பாட்டின் படி,பேல்பூரி குஜராத்தி சமூகத்தினரால் உருவாக்கப்பட்டதாகும். இவர்கள் எளிய வட இந்திய சிக்கலான சுவையான உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் இதை உருவாக்கினர். இல்லத்தரசிகள் குஜராத்தில் இதை உருவாக்கத் தொடங்கினர். இவர்கள் பக்கோடி பூரி போன்ற பல வகைகளைக் கண்டுபிடித்தனர். பேல் பூரி பிரபலமடைந்து வருவதால் மங்களூர் மற்றும் சிந்திகள் போன்ற சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களது சொந்த தயாரிப்பாக தயாரிக்க தொடங்கினர்.[5] இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு அசல் மும்பை பேல்பூரி செய்முறை பரவியுள்ளது. உலர்ந்த பேல் பூரி மசாலா மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாம்கீன் படாங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வெங்காயம், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சைசாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி அலங்கரிக்கப்படுகிறது.[6] பேல் பூரி பெங்காலியில் ஜால்முரி என்று அழைக்கப்படுகிறது (இதன் பொருள் "காரமான அவல்") [7] பேல்பூரியின் பிறப்பிடமான மைசூர் அல்லது மங்களூரில் சுருமுரி அல்லது சுர்முரி என அழைக்கப்படுகிறது.[8]
வரலாறு
[தொகு]பேல்பூரி எப்போது, எங்கு,யாரால் தயாரிக்கப்பட்டது என்ற தெளிவான குறிப்போ பதிவோ இல்லை.உத்தரபிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து, மும்பையில் வசிக்கும் தொழிலாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்கின்றனர்.
பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள்
[தொகு]உருளைக்கிழங்கு, வெங்காயம்,சாட் மசாலா மற்றும் சட்னி(காரத் துவையல்) பிற வறுத்த சிற்றுண்டிகளின் கலவையுடன்,அவல்,சேவ்(பெசன் மாவிலிருந்து தயாரிக்கப்படும் மெல்லிய நூடுல்ஸ் போன்ற வறுத்த சிற்றுண்டி)இவற்றை தளமாக கொண்டு பேல்பூரி தயாரிக்கப்படுகிறது.[9] பேல் பூரி இனிப்பு, உப்பு, புளிப்பு, காரம் என சமநிலையான சுவைகளைக் கொண்டுள்ளது. வேறு அமைப்பிலான அவல் மற்றும் மிருதுவான சேவ்,தக்காளி,மிளகாய் போன்றவை அடித்தளமாக சேர்க்கப்படுகின்றன. வட இந்தியாவின் சமையல் குறிப்புகளில் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கும் இதில் அடங்கும்.[10]
பல வகையான சட்னிகள்(துவையல்) இதற்கு சுவையை அளிக்கின்றன.பெரும்பாலும் இரு விதமான சட்னிகள் பயன்படுத்தப்படுகின்றன.ஒன்று இருண்ட பழுப்பு நிறமுடைய (சாந்த் சட்னி) ஆகும்.பேரிச்சம் பழம் மற்றும் புளி வைத்து தயாரிக்கப்படுகிறது.புதினா இலை,கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பச்சை மசாலா சட்னி.
மாறுபாடுகள்
[தொகு]பேல் பூரி துண்டுகளாக்கப்பட்டு அதில் பச்சையான இனிப்பு சுவையுள்ள மாங்க்காய்,துண்டாக்கப்பட்ட வெங்காயம், கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றின் கலவையால் அலங்கரிக்கப்படும்.சில நேரங்களில் வறுத்த மிருதுவான கோதுமை ரொட்டியுடன் வழங்கப்படும்.
பேல் பூரியின் பிற வகைகள்: பேல் செவ்புரி - பேல்பூரி, சட்னி, பாப்டி மற்றும் செவ் ஆகியவற்றின் கலவை. தாஹி பேல் பூரி - பேல்பூரி, சட்னி, பாப்டி மற்றும் தாஹி (தயிர்) கலவை. சேவ் பப்டி சாட் - செவ்புரி போன்றது ஆனால் பல வகையான சட்னி, உருளைக்கிழங்கு மற்றும் சாட் மசாலாவுடன் உள்ள கலவை. சுர்முரி - மிளகாய் பொடியுடன் கலந்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலைகள்,தேங்காய் எண்ணெயின் சில துளிகள்,வறுத்த நிலக்கடலை சேர்ந்த கலவை
பரிமாறுதல்
[தொகு]பேல் பூரி பல வழிகளில் பரிமாறப்படுகிறது.சிற்றுண்டியகம் மற்றும் உணவகங்களில் ஒரு தட்டில் வைத்து பரிமாறப்படுகிறது.தெரு ஓர உணவகங்களில் கூம்பு வடிவமாக மடித்து காகிதத்தில் வழங்கப்படுகிறது.ஸ்பூன் (கரண்டி)மூலம் பரிமாறப்படும். இதுவே பேல் பூரியின் உண்ணக்கூடிய அங்கமாகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Churmuri". The taste of Mysore. பார்க்கப்பட்ட நாள் 18 December 2013.
- ↑ Price, Jane (2007). Gourmet Vegetarian: The Vegetarian Recipes You Must Have. Murdoch Books. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-921259-09-8.
- ↑ Gupta, Niru. "Bhel Puri". Niru Gupta. http://food.ndtv.com/recipe-bhel-puri-99035.
- ↑ Doshi, Malvi Doshi with Neil; Quayle, Bella Doshi; foreword by Michele Anna Jordan; illustrations by Sonya (2002). Cooking along the Ganges: the vegetarian heritage of India. New York: Writer's Showcase. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-595-24422-X.
- ↑ Vir Sanghvi (2004). Rude Food: The Collected Food Writings of Vir Sanghvi. Penguin Books India. pp. 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-303139-0.
- ↑ "Buy Bhadang bhel, Order Bhadang bhel Online in India at Hariom Sweets Shop". www.hariomsweets.in. Archived from the original on 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
- ↑ "Jhal Muri Recipe: How to Make Jhal Muri Recipe | Homemade Jhal Muri Recipe". recipes.timesofindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
- ↑ "What is churumuri". Churumuri. பார்க்கப்பட்ட நாள் 18 December 2013.
- ↑ Bhel puri
- ↑ Harpham, [editor Zoë (2004). The essential rice cookbook. Sydney (N.S.W.): Murdoch Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74045-540-1.
{{cite book}}
:|first=
has generic name (help)