சக்கினாலு
வகை | சிற்றுண்டி |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தெலங்காணாவின் வட கிழக்குப் பகுதி |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு |
சக்கினாலு (Sakinalu) என்பது இந்தியாவின் தெலங்கானாவின் வடக்கு பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் ஒரு சிறப்பு வகை சிற்றுண்டியாகும். இது எண்ணெயில் பொரித்த அரிசி மாவுடன் கலந்து வட்டமாகச் செய்யப்படுகிறது. [1] [2] இது மகர சங்கராந்தி பண்டிகையின் போது தயாரிக்கப்படுகிறது. [3] மணமகளின் பெற்றோர்களால் மணமகனின் பெற்றோருக்கு இது வழங்கப்படுகிறது. [4]
தேவையான பொருட்கள்
[தொகு]சிறிய அளவிலான மசாலா, எள், ஓம விதைகள், மற்றும் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட அரிசி மாவுடன் சக்கினாலு தயாரிக்கப்படுகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]"சக்கினாலு" என்ற சொல் "சக்கினாமு" என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இது "சக்ரம்" என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது சக்கரம் அல்லது வட்டம் . அதன் வட்ட வடிவமே இதற்குக் காரணம். மகர சங்கராந்தியின் போது உழவின் புதிய நெல் அறுவடை செய்யப்படும் போது உழவர் சமூகம் இந்த பாரம்பரிய திருவிழா உணவைத் தயாரிக்கிறது.
தரம்
[தொகு]இது தெலங்கானா பாரம்பரிய விழா உணவுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Students celebrate ‘Sankranti Sambaralu'". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140103022607/http://www.hindu.com/2011/01/01/stories/2011010151560200.htm. பார்த்த நாள்: 9 February 2012.
- ↑ "BJP women add festive flavour to protest". The Hindu இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110921135155/http://www.hindu.com/2011/01/14/stories/2011011456600200.htm. பார்த்த நாள்: 9 February 2012.
- ↑ "Telangana supporters stage ‘rasta rokos'". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article1094429.ece. பார்த்த நாள்: 9 February 2012.
- ↑ "Trailing the Andhra food route". Times of India. http://timesofindia.indiatimes.com/Trailing-the-Andhra-food-route/articleshow/22855372.cms. பார்த்த நாள்: 9 February 2012.