பூச்சோங்–டெங்கில் சாலை
பூச்சோங்–டெங்கில் சாலை Jalan Puchong–Dengkil | |
---|---|
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | பண்டார் புத்திரி பூச்சோங் |
![]() | |
தெற்கு முடிவு: | சைபர்ஜெயா, சிலாங்கூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பண்டார் புத்திரி பூச்சோங், பத்து 14 பூச்சோங், தாமான் பூச்சோங் உத்தாமா, பண்டார் புக்கிட் பூச்சோங், தாமான் மெராந்தி ஜெயா, தாமான் தாசேக் பூச்சோங், தாமான் தேசா ஆயர் ஈத்தாம், பண்டார் புக்கிட் பூச்சோங் 2, புலாவ் மெராந்தி, தாமான் புத்ரா பெர்டானா, பண்டார் நுசாபுத்ரா, தாமான் அமான் புத்ரா, சிலாங்கூர் அறிவியல் பூங்கா 2, தாமான் பிங்கிரன் சைபர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
பூச்சோங்–டெங்கில் சாலை அல்லது பூச்சோங்–சைபர்ஜெயா சாலை எனும் சிலாங்கூர் மாநிலச் சாலை B15 (Selangor state route B15) (ஆங்கிலம்: Jalan Puchong–Cyberjaya) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சைபர்ஜெயா, பூச்சோங் ஆகிய இடங்களில் ஒரு முக்கிய சாலை ஆகும்.
இந்தச் சாலை பூச்சோங், பண்டார் புத்திரி பூச்சோங், சைபர்ஜெயா, டெங்கில் போன்ற முக்கியமான நகரங்களை இணைக்கின்றது.
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
[தொகு]டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
, (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; (LDP) என்பது மலேசியாவில் சிலாங்கூர் பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள 40-கி.மீ. (24.9 மைல்) நெடுஞ்சாலை ஆகும்.[1]
இந்த அதிவேக நெடுஞ்சாலை பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் புத்ரா பெர்மாய் நகரங்களுக்கு இடையே வடக்கு - தெற்கு திசையில் புத்ராஜெயாவிற்கு அருகில் செல்கிறது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங் நகரங்களுக்கு ஒரு பெரிய சாலையாகவும் அமைகிறது.
இதன் தடத்தில் அமைந்துள்ள ஒரு குறுகிய கிழக்கு - மேற்கு துணைச் சாலை பண்டார் பூச்சோங்கையும் யூஇபி சுபாங் ஜெயாவின் புறநகர் பகுதியையும் இணைக்கிறது.
விளக்கம்
[தொகு]- விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
- நெடுஞ்சாலை (ஆங்கிலம்:: Highway; மலாய்: Laluan)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia).
- கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Federal Route; மலாய்: Laluan Persekutuan)
- மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)