பல்லவன் கிராம வங்கி
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
வகை | [அரசு வங்கி] இந்தியன் வங்கியின் துணை வங்கி |
---|---|
நிறுவுகை | 31-08-2006,Regional Rural Banks Act-1976 |
தலைமையகம் | சேலம், தமிழ்நாடு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழகத்தின் வட மாவட்டங்கள் |
முதன்மை நபர்கள் | சுரேஷ்குமார் எஸ். (தலைவர்) |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | நுகர்வோர் வங்கி, வணிக வங்கி, நிதிச் சேவைகள், முதலீட்டு வங்கி, அடமானக் கடன்கள், காப்பீடு தனிநபர் வங்கி, தனியார் சம்பங்கு, வைப்புகள், பிணையங்கள், சொத்து மேலாண்மை, வள மேலாண்மை, கடனட்டைகள் |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (50%), தமிழ்நாடு அரசு (15%) & இந்தியன் வங்கி (35%) |
பணியாளர் | 611 (2014) |
இணையத்தளம் | www |
பல்லவன் கிராம வங்கி இந்தியாவின் தமிழ்நாட்டில் செயற்பட்டுவரும் மண்டல ஊரக வங்கியாகும். தமிழகத்தின் 15 வட மாவட்டங்களில் 200க்கும் அதிகமான கிளைகளுடன் 600க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டு செயற்பட்டுவருகிறது.
வரலாறு
[தொகு]பல்லவன் கிராம வங்கி, இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் 2006 ஆகத்து 31 அன்று நிறுவப்பட்டது. இவ்வங்கி 2006 ஆகத்து 31 அன்று இந்திய அரசிதழில் வெளியான அறிவிப்பின்படி, தர்மபுரியில் இயங்கிய அதியமான் கிராம வங்கியையும், கடலூரில் இயங்கிய வள்ளலார் கிராம வங்கியையும் இணைத்ததன் மூலமாக நிறுவப்பட்டது.