இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம்
வகை | இந்திய இலாபநோக்கற்ற சட்டங்கள் பகுதி 25 நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1] |
முதன்மை நபர்கள் | பாலச்சந்திரன் எம், தலைவர் ஏபி. ஓட்டா, முதன்மை செயல் அலுவலர் & மேலாண் நிறுவனர்[2] |
தொழில்துறை | கொடுப்பனவு |
உற்பத்திகள் | தேசிய நிதிய பரிமாற்றம் (NFS), தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் (NACH), உடனடி கொடுப்பனவு சேவை (IMPS), ரூபே, காசோலை துண்டிப்பு அமைப்பு (CTS), ஆதார்வழிச் செயல்படு கொடுப்பனவு அமைப்பு (AePS), ஒருமித்த கொடுப்பனவு இடைமுகப்பு(UPI), *99# |
பணியாளர் | 700+ |
இணையத்தளம் | www.npci.org.in |
இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (National Payments Corporation of India, NPCI) இந்தியாவின் அனைத்து சில்லறைக் கொடுப்பனவு அமைப்புக்களுக்கும் மைய நிறுவனமாக விளங்குகின்றது; இதனுடைய இலக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்விடத்திலிருந்தும் எந்நேரத்திலும் இணையக் கொடுப்பனவுகளை செய்ய இயலுமாறு செய்வதாகும். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பகுதி 25-ன் கீழ் இலாபநோக்கற்ற அமைப்பாக விளங்குகின்றது. இதனை நாட்டின் மையவங்கியான இந்திய ரிசர்வ் வங்கி வளர்த்தெடுக்கின்றது.
இது உள்நாட்டு அட்டைக் கொடுப்பனவு பிணையம் ரூபே உருவாக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது; இதனால் பன்னாட்டு அட்டை திட்டங்களின் மீதான சார்பு குறைந்துள்ளது. தற்போது ரூபே அட்டை நாட்டின் அனைத்து தன்னியக்க வங்கி இயந்திரங்களிலும் (2,22,278+)*, விற்பனை முனை கணினிகளிலும் (12,20,763+)* பெரும்பாலான இணைய வணிக நிறுவனங்களிலும் (30,000+)* ஏற்கப்படுகின்றது. 300க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளும் வட்டார ஊரக வங்கிகளும் ரூபே அட்டையை வெளியிட்டுள்ளன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "National Payments Corporation of India". Npci.org.in. Archived from the original on 2011-09-06. பார்க்கப்பட்ட நாள் 2011-03-16.
- ↑ "Mobile money transfer fee cut to 10p". Indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2011-03-16.