பர்சா மாவட்டம்
பர்சா மாவட்டம் (Parsa District) (நேபாளி: पर्सा जिल्लाⓘ, தெற்காசியாவில் நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ளது. நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வீரகஞ்ச் நகரம் ஆகும்.
நாராயணி மண்டலத்தின் தராய் சமவெளியில் அமைந்த பர்சா மாவட்டத்தின் பரப்பளவு 1,353 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 6,01,017 ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (44%), நேபாள மொழி (45%), உருது மொழி (1%) மற்றும் பிற மொழிகள் (1%) பேசப்படுகிறது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
[தொகு]இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,300 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. [1]
கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்
[தொகு]பர்சா மாவட்டத்தில் எண்பத்தி மூன்று கிராம வளர்ச்சி மன்றங்களும், பீர்கஞ்ச் எனும் நகராட்சியும் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help)