உள்ளடக்கத்துக்குச் செல்

உருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உருது மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Urdu (اردو )
பேசப்படுவது:பாகிஸ்தான், இந்தியா மற்றும் 19 வேறு நாடுகள்
பேசுபவர்கள் தாய்மொழி: 10.4 கோடி
மொத்தம்: 48 கோடி
பொது
பகுப்பு:

இந்திய-ஐரோப்பியம்
 இந்திய-ஈரானியம்
  இந்திய-ஆரியம்
   மத்திய வலயம்
      உருது

உத்தியோகபூர்வ நிலை
அரசகரும மொழி:பாகிஸ்தான், இந்தியா
ஒழுங்குபடுத்தப் படுவது: ஒழுங்குபடுத்தப் படுவதில்லை
மொழிக்கான குறியீடு
ISO 639-1:ur
ISO 639-2:urd
SIL:URD

உருது (Urdu) 13-ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். உருது, இந்தியுடன் சேர்த்து இந்துசுத்தானி என அழைக்கப்படுகின்றது. மண்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயாகும். தாய் மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உருது உலகின் 20-ஆவது பெரிய மொழியாகும். 6 கோடி மக்கள் இதனைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது மொழியாகக் கொண்டுள்ளவர்கள் உட்பட 11 கோடிப் பேர் இதனைப் பேசுகிறார்கள். உருது பாகிஸ்தானின் அரசகரும மொழியாகவும், இந்தியாவின் அரசகரும மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த காலகட்டத்தில் அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை சிப்பாய்களுக்கும், அப்படையில் இணைந்த கடிபோலி (ஹிந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய ஹிந்து சிப்பாய்களுக்குமிடையே ராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட மொழி பரிவர்த்தனையில் தோன்றிய மொழி. ராணுவக் கூடாரங்களில் தோன்றி, பரவி செழிப்படைந்ததால் 'உருது' என்று பெயர் பெற்றது.[சான்று தேவை] துருக்கி மொழியில் ராணுவம் தற்காலிகமாக தங்கும் இடங்களை (army camps) ஒர்து என்று அழைப்பர்.[1]

உருது மொழி பேசப்படும் நாடுகள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Peter Austin (1 September 2008). One thousand languages: living, endangered, and lost. University of California Press. pp. 120–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-25560-9. பார்க்கப்பட்ட நாள் 29 December 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் உருதுப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருது&oldid=3835662" இலிருந்து மீள்விக்கப்பட்டது