அவதி மொழி
அவதி மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | hindi |
ISO 639-2 | awa |
ISO 639-3 | awa |
![]() |
அவதி மொழி இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அவத் பகுதியிலேயே பேசப்படினும், மத்தியப் பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள்; டெல்லி, நேபாளம் ஆகிய இடங்களிலும் இம் மொழி பேசுவோரைக் காணமுடியும்.[1][2][3]
தற்காலத்தில் இது இந்தியின் ஒரு கிளை மொழியாகவே கருதப்பட்டு வரினும், அண்மையில் இந்தி மொழி தரப்படுத்தப்படுவதற்கு முன், அவதி மொழியே இந்துஸ்தானியின் கிளைமொழிகளுள் இரண்டாவது முக்கிய இலக்கிய மொழியாகத் திகழ்ந்தது. துளசிதாசின் ராம்சரித்மானஸ், மாலிக் முகம்மத் ஜெய்சியின் பத்மாவத் என்பன இம்மொழியிலுள்ள முக்கிய இலக்கியங்களாகும்.
அவதி, இப்பகுதியின் மிகப் பழைய மொழியான பிராஜ் பாஷாவிலிருந்து தோன்றியது. மகதி மொழியின் தாக்கமும் இம்மொழியில் காணப்படுகின்றது. நவீன ஹிந்தி மொழியின் உருவாக்கத்தில் அவதி மொழிக்கும் முக்கிய பங்கு உண்டு.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2011". Office of the Registrar General & Census Commissioner, India: p. 8. 2011. https://censusindia.gov.in/nada/index.php/catalog/42458/download/46089/C-16_25062018.pdf.
- ↑ "National Population and Housing Census 2011". Census of Nepal: p. 138. 2011. https://cbs.gov.np/wp-content/upLoads/2020/07/National-Population-and-Housing-Census-2011-Caste-ethnicity-and-mother-tongue.pdf.
- ↑ Oldenburg, Veena Talwar (1984). The Making of Colonial Lucknow, 1856–1877. Princeton University Press. p. 5.