உள்ளடக்கத்துக்குச் செல்

நேங்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாச்சார நிகழ்வுகளுக்காகப் பய்னபடுத்தப்படும் நேங்லோ

நேங்லோ (Nanglo) என்பது மூங்கிலைக் கொண்டு தட்டையாக நெய்யப்பட்ட ஒரு வகை தட்டு ஆகும் [1]. பாரம்பரியமாக மெல்லிய மூங்கில் துண்டுகளை ஒன்றோடு ஒன்றிணைத்து பண்டைய காலத்தில் துணி நெய்வது போல நூலை கைகளால் சிக்கலாக கோர்த்து தட்டையான மேற்பரப்பு போல இவற்றை தயாரிக்கிறார்கள். நெல், அரிசி, பருப்பு, அவரை மற்றும் பிற தானியங்கள் போன்றவற்றை சலிக்கவும் அவற்றிலுள்ள தூசி துகள்களைப் தூற்றுதல் மூலம் பிரிப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நேபாள சமையலறையிலும் நேங்லோ ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளது. இது கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களிலும் கூட காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Upadhyay, M.P. (2005). Shrestha, P.K.; Jarvis, D.I. (eds.). On-farm conservation of agricultural biodiversity in Nepal. Bioversity International. p. 69. ISBN 9789290436959.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேங்லோ&oldid=2570377" இலிருந்து மீள்விக்கப்பட்டது