பொக்காரா
பொக்காரா
पोखरा | |
---|---|
மலை வாழிடம் | |
அடைபெயர்(கள்): பொக்கு | |
நாடு | நேபாளம் |
பெரும் பிரிவு | மேற்கு |
மண்டலம் | கண்டகி |
மாவட்டம் | காஸ்கி மாவட்டம் |
எழுத்தறிவு விகிதம் | 83% High |
Incorporated | 1962 |
பரப்பளவு | |
• மொத்தம் | 55.22 km2 (21.32 sq mi) |
• நீர் | 4.4 km2 (1.7 sq mi) |
உயர் புள்ளி | 1,740 m (5,710 ft) |
தாழ் புள்ளி | 827 m (2,713 ft) |
மக்கள்தொகை (2011 (last census)) | |
• மொத்தம் | 2,55,465 |
• அடர்த்தி | 4,798.8/km2 (12,429/sq mi) |
• இனக் குழுக்கள் | காஸ் அந்தணர் செட்டிரி தாக்கூரி தலித் குரூங் மகர் நேவார் தக்களி |
• சமயங்கள் | இந்து பௌத்தம் கிறித்தவம் |
நேர வலயம் | GMT +5:45 |
தொலைபேசி குறியிடு எண் | 33700 (WRPD), 33702, 33704, 33706, 33708, 33713 |
இடக் குறியீடு | 061 |
இணையதளம் | pokhara |
பொக்காரா (Pokhara) (நேபாள்|पोखरा), காத்மாண்டுவிற்கு அடுத்து, நேபாள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று.[1] பொக்காரா, காஸ்கி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. தலைநகர் காத்மாண்டிலிருந்து மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காரா மாநகரம் அமைந்துள்ளது. பெரும்பாலான கூர்க்கா படை வீரர்களின் தாயகமாக பொக்காரா உள்ளது.
இமயமலைத் தொடரில் 827 முதல் 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[2][3] பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.[4]
காத்மாண்டிலிருந்த்து முக்திநாத் யாத்திரை செல்பவர்கள் பொக்காரா வழியாகச் செல்ல வேண்டும்.
புவியியல்
[தொகு]பொகாரா பள்ளத்தாக்கில் வடமேற்கில் பொக்காரா நகரம் அமைந்துள்ளது.[5] பொக்காரா, இமயமலைத் தொடரில் 827 மீட்டர் முதல் 1,7400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 அங்குலம் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.[6] சேதி கண்டகி ஆறு பொக்காரா நகரத்தில் பாய்கிறது.[7] .[8][9] பொக்காராவிலிருந்து தெற்கே 4. 4 கிலோ மீட்டர் தொலைவில் பெவா ஏரி அமைந்துள்ளது.
பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.<[10]
தட்ப வெப்பம்
[தொகு]கோடைக் காலத்தில் அதிக பட்சம் 25 முதல் 33 பாகை செல்சியல் வெப்பமும், குளிர் காலத்தில் 2 முதல் 15 பாகை வெப்பமும் காணப்படுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 இன்ச் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பொக்காரா (1981-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 19.7 (67.5) |
22.2 (72) |
26.7 (80.1) |
29.8 (85.6) |
30.1 (86.2) |
30.6 (87.1) |
30.0 (86) |
30.2 (86.4) |
29.3 (84.7) |
27.5 (81.5) |
24.1 (75.4) |
20.7 (69.3) |
26.7 (80.1) |
தினசரி சராசரி °C (°F) | 13.4 (56.1) |
15.7 (60.3) |
19.8 (67.6) |
22.8 (73) |
24.3 (75.7) |
25.8 (78.4) |
26.0 (78.8) |
26.1 (79) |
25.1 (77.2) |
22.1 (71.8) |
18.0 (64.4) |
14.4 (57.9) |
21.1 (70) |
தாழ் சராசரி °C (°F) | 7.1 (44.8) |
9.2 (48.6) |
12.8 (55) |
15.7 (60.3) |
18.4 (65.1) |
20.9 (69.6) |
22.0 (71.6) |
22.0 (71.6) |
20.8 (69.4) |
16.7 (62.1) |
11.9 (53.4) |
8 (46) |
15.5 (59.9) |
பொழிவு mm (inches) | 23 (0.91) |
35 (1.38) |
60 (2.36) |
128 (5.04) |
359 (14.13) |
669 (26.34) |
940 (37.01) |
866 (34.09) |
641 (25.24) |
140 (5.51) |
18 (0.71) |
22 (0.87) |
3,901 (153.58) |
ஆதாரம்: Sistema de Clasificación Bioclimática Mundial[11] |
வரலாறு
[தொகு]மத்தியகாலத்தில், சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையே வணிகத்திற்கு பொக்காரா நகரம் முக்கிய வழியாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தில், கஸ்கி குறுநில மன்னராட்சியில் ஒரு பகுதியாக பொக்காரே இருந்தது.[12]
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]பொக்காராவில் இந்து கோயில்களும் மற்றும் பௌத்த மடாலயங்களும் அருஅருகே காணப்படுகிறது.[13][14] சில முக்கிய கோயில்கள்;
- பொக்காரா சாந்தி தூபி
- வராகி கோயில், பெவா ஏரி
- விந்தியவாசினி கோயில்
- உலக அமைதிக்கான மடாலயம்
- இராதாகிருஷ்ணன் கோயில்
சுற்றுலா & பொருளாதாரம்
[தொகு]திபெத்தை 1950இல் சீனா ஆக்கிரமிப்பு செய்த பிறகு மற்றும் 1962இல் நடந்த இந்திய-சீனப் போருக்கு பிறகு, சீனாவிலிருந்து பொக்காரா வழியாக இந்தியாவிற்கான வணிகம் முழுவதும் குறைந்து விட்டது. தற்போது நேபாளத்தின் மிகப்பெரும் பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாக பொக்காரா விளங்குகிறது.[15] மலையேற்றச் சுற்றுலாவும், மருத்துவச் சேவையும் பொக்காராவின் பொருளாதாரதிற்கான மூலமாக உள்ளது.[16] பொக்காரா நகரத்தில் 305 தங்கும் விடுதிகளில், இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகளும், ஐந்து மூன்று நட்சத்திர விடுதிகளும், 15 இரண்டு நட்சத்திர விடுதிகளும் உள்ளன.[17] மத்திய காலத்தில் கட்டப்பட்ட வராகி கோயில், விந்தியவாசினி கோயில், சிதாதேவி கோயில் முதலிய இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்திய ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
சுற்றுலா பயணிகள் வருகை
[தொகு]ஆண்டு | பன்னாட்டு சுற்றுலா பயணிகள் பொக்காராவிற்கு வருகை[18] |
% |
---|---|---|
ஆண்டு | வெளிநாட்டு பயணிகள் |
% மாற்றங்கள் முந்தைய ஆண்டு |
1995 | 363,395 | - |
1996 | 393,613 | 8.3 |
1997 | 421,857 | 7.2 |
1998 | 463,684 | 9.9 |
1999 | 491,504 | 6.0 |
2000 | 463,646 | -5.7 |
2001 | 77,853 | -84 |
2002 | 68,056 | -23.7 |
2003 | 85,529 | 22.7 |
2004 | 87,693 | 13.9 |
2005 | 74,012 | |
2006 | 94,799 | |
2007 | 165,177 | 74 |
2008 | 186,643 | |
2009 | 203,527[19] | 5 |
2010 | 230,799[20] | 13.39 |
2011 | 736,215[21] | 21.4 |
2012 | 803,092[18] | 9.1 |
2013 | 798,000[22] | -0.7 |
உணவகங்கள் & தங்குமிடங்கள்
[தொகு]பொக்காராவில் 250க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் கொண்டுள்ளது.[23] பொக்காராவில் இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளது.
மலையேற்றப் பயிற்சிக் களங்கள்
[தொகு]நேபாள நாட்டில் பொக்காரா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு மலையேற்ற பயிற்சி நிலையங்கள் உள்ளது. இந்நிலையத்தின் மூலம் அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு மலைகளில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து வசதிகள்
[தொகு]நகரப் போக்குவரத்து வசதிகள்
[தொகு]நகரம், நகர்புறங்களில் மற்றும் அருகில் அமைந்த கிராமப்புறங்களில் அரசு பேருந்துகளும், சிற்றுந்து வசதிகள் உள்ளது.
மற்ற நகரங்களிடையே
[தொகு]நேபாளத்தின் மற்ற காத்மாண்டூ உட்பட பல நகரங்களை இணைக்க பொக்காரவிலிருந்து, பேருந்து மற்றும் விமான சேவைகள் உள்ளது. பொக்காராவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.[24]
ஆறுகளும் ஏரிகளும்
[தொகு]பொக்காரா நீர் வளம் கொண்டது. முக்கிய நீர் நிலைகள்;[25][26]
ஏரிகள்
[தொகு]- பெவா ஏரி
- பெக்னாஸ் ஏரி
- ரூபா ஏரி
ஆறுகள்
[தொகு]- சேதி கண்டகி ஆறு
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cost of Living Index in Nepal - Statistics & Graphs of Nepalese Citizen's Economic Powe
- ↑ United Nations Field Coordination Office (UNFCO) (7 June 2011). "An Overview of the Western Development Region of Nepal" (PDF). Bharatpur, Nepal: United Nations: Nepal Information Platform. pp. 1–9. Archived from the original (PDF) on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
- ↑ Pradhan, Pushkar Kumar (1982). "A Study of Traffic Flow on Siddartha and Prithvi Highway". The Himalayan Review 14: 38–51 இம் மூலத்தில் இருந்து 2015-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150331031227/http://nepjol.info/index.php/HR/article/download/4507/3755.
- ↑ Earthquake Risk Reduction and Recovery Preparedness Programme for Nepal: UNDP/ERRRP – Project Nep/07/010 (July 2009). "Report on Impact of Settlement Pattern, Land Use Practice and Options in High Risk Areas: Pokhara Sub‐Metropolitan City" (PDF). Kathmandu: UNDP, Nepal. p. 10. Archived from the original (PDF) on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Gurung, Harka B. (2001). Pokhara Valley: A Geographical Survey. Kathmandu, Nepal: Nepal Geographical Society.
- ↑ Bezruchka, Stephen; Lyons, Alonzo (2011). Trekking Nepal: A Traveler's Guide (8th ed.). Seattle, Washington, USA: The Mountaineers Books. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89886-613-1.
- ↑ Tripathi, M. P.; Singh, S. B. (1996). "Histogenesis and Functional Characteristics of Pokhara, Nepal". New Perspectives in Urban Geography. New Delhi, India: M D Publications Pvt. Ltd. pp. 51–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7533-014-7.
- ↑ Fort, Monique (2010). "The Pokhara Valley: A Product of a Natural Catastrophe". In Piotr Migoń (ed.). Geomorphological Landscapes of the World. London: Springer. pp. 265–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-3054-2.
- ↑ Paudel, Lalu Prasad; Arita, Kazunori (April 2000). "Tectonic and polymetamorphic history of the Lesser Himalaya in central Nepal". Journal of Asian Earth Sciences 18 (5): 561–584. doi:10.1016/S1367-9120(99)00069-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1367-9120. http://www.sciencedirect.com/science/article/pii/S1367912099000693.
- ↑ Herzog, Maurice (1952). Annapurna: The First Conquest of an 8,000-Meter Peak (Kindle Edition in 2011 ed.). New York, NY, USA: E. P. Dutton & Co. Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4532-2073-3.
- ↑ NEPAL-POKHARA AIRPORT பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம். Centro de Investigaciones Fitosociológicas. Retrieved 26 September 2014.
- ↑ Rai, Bandana (2009). "The Gorkha Kingdom". Gorkhas: The Warrior Race. Delhi, India: Kalpaz Publications. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-776-8.
- ↑ Boke, Charis (2008). "Faithful Leisure, Faithful Work: Religious Practice as an Act of Consumption in Nepal". Himalayan Research Papers Archive: 1–21.
- ↑ Adhikari, Jagannath (2004). "A socio-ecological analysis of 'the loss of public properties in an urban environivient: a case study of Pokhara, Nepal". Contributions to Nepalese Studies 31 (1): 85–114. http://lib.icimod.org/record/11534/files/6697.pdf.
- ↑ Nepal, S. K.; Kohler, T.; Banzhaf, B. R. (2002). Great Himalaya: tourism and the dynamics of change in Nepal. Zurich, Switzerland: Swiss Foundation for Alpine Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-85515-106-7.
- ↑ Zurick, David N. (1992). "Adventure Travel and Sustainable Tourism in the Peripheral Economy of Nepal". Annals of the Association of American Geographers 82 (4): 608–628. doi:10.1111/j.1467-8306.1992.tb01720.x. http://dx.doi.org/10.1111/j.1467-8306.1992.tb01720.x.
- ↑ Adhikari, Bimal (2011). "Tourism Strategy of Nepalese Government And Tourist’s Purpose of Visit in Nepal". Aichi Shukutoku Knowledge Archive 7: 79–94. பன்னாட்டுத் தர தொடர் எண்:1881-0373. http://hdl.handle.net/10638/4985.
- ↑ 18.0 18.1 Ghimire, Bal Krishna (Chief Editor) (2013). "Nepal Tourism Statistics 2012" (PDF). www.tourism.gov.np/. Kathmandu: Ministry of Culture, Tourism & Civil Aviation. Govt. of Nepal. Archived from the original (PDF) on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
{{cite web}}
:|first1=
has generic name (help) - ↑ Sharma, Lal Prasad (30 October 2010). "Tourist arrivals in Pokhara swell 20pc". The Kathmandu Post இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141207201546/http://www.ekantipur.com/the-kathmandu-post/2010/10/29/money/tourist-arrivals-in-pokhara-swell-20pc/214314/.
- ↑ Pokhrel, Santosh (8 March 2011). "Tourist arrivals to Pokhara up". Republica இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808050054/http://archives.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=28994.
- ↑ eTN (2 January 2012). "Nepal tourism misses 1 million arrivals target". eTN Global Travel Industry News இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924003244/http://www.eturbonews.com/27171/nepal-tourism-misses-1-million-arrivals-target.
- ↑ TravelBizNews (8 March 2014). "798,000 tourists visited Nepal in 2013,arrivals down by 0.7 %". TravelBizNews Online இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141108025549/http://www.travelbiznews.com/news/item/2189-798-thousand-tourists-visited-nepal-in-2013.
- ↑ Sedai, Ram Chandra (2011). "Tourist Accommodation Facilities in the major Tourist Areas of Nepal". Nepal Tourism and Development Review 1 (1): 102–123. doi:10.3126/ntdr.v1i1.7374. http://www.nepjol.info/index.php/NTDR/article/view/7374.
- ↑ Himalayan News Service (15 October 2011). "Pokhara to have international airport". The Himalayan Times (Kathmandu) இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141103173920/http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Pokhara+to+have++international+airport&NewsID=305805.
- ↑ Thapa, Gopal B.; Weber, Karl E. (June 1992). "Deforestation in the Upper Pokhara Valley, Nepal". Singapore Journal of Tropical Geography 12 (1): 52–67. doi:10.1111/j.1467-9493.1991.tb00028.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1467-9493.1991.tb00028.x/abstract.
- ↑ Bisht, Ramesh Chandra (2008). International Encyclopaedia of Himalayas (Vol. 4, Nepal Himalayas ed.). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8324-269-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- Online News From Pokhara
- Open Directory Project entry for Pokhara
- The official Pokhara website பரணிடப்பட்டது 2012-03-31 at the வந்தவழி இயந்திரம்
- Pokhara Photo Gallery
- - Pokhara Flight information
- Partnership for Poverty Action (PFPA) பரணிடப்பட்டது 2014-05-24 at the வந்தவழி இயந்திரம்
- Welcome to Pokhara
- Kathmandu to Pokhara car rental
- Useful information about Pokhara