பயனர்:வாசுகி007
பூலோகத்தின் புவியியல்
[தொகு]முன்னுரை
[தொகு]கிழ்காணும் கட்டுரையில் புவியல் பற்றி விரிவாக காண்போம்
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை,
- இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு;
- நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது;
- மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு;
- புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும்.
ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
புவியியலின் பிரிவுகள்[தொகு]
[தொகு]இயற்கைப் புவியியல்[தொகு]
[தொகு]இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), கற்கோளம் (lithosphere), நீர்க்கோளம் (hydrosphere), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- நிலவியல் (Geology)
- நில உருவாக்கவியல் (Geomorphology)
- நீர்வள இயல் (Hydrology)
- பனியாற்றியல் (Glaciology)
- உயிரினப் புவியியல் (Biogeography)
- காலநிலையியல்
- மண்ணியல் (Pedology)
- புவி உருவவியல் (Geodesy)
- தொல்புவியியல் (Palaeogeography)
- சூழற் புவியியலும் மேலாண்மையும்
- நிலத்தோற்ற வாழ்சூழலியல் (Landscape ecology)
மானிடப் புவியியல்[தொகு]
[தொகு]மானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் இயல் நிலத்தோற்றமாக (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. சூழற் புவியியல் இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது.
மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.
- பொருளாதாரப் புவியியல் (Economic geography)
- வளர்ச்சிப் புவியியல் (Development geography)
- மக்கள் தொகைப் புவியியல் அல்லது மக்கட் பரம்பல் (Population geography or Demography)
- நகரப் புவியியல் (Urban geography)
- சமூகப் புவியியல் (Social geography)
- நடத்தைப் புவியியல் (Behavioral geography)
- பண்பாட்டுப் புவியியல் (Cultural geography)
- அரசியற் புவியியல் (Political geography) புவிசார் அரசியலும் (Geopolitics) அடங்கலாக.
- வரலாற்றுப் புவியியல் (Historical geography)
- பிரதேசப் புவியியல் (Regional geography)
- சுற்றுலாப் புவியியல் (Tourism geography)
- உத்திசார் புவியியல் (Strategic geography)
- பாதுகாப்புப் புவியியல் (Military geography)
- பெண்ணியப் புவியியல் (Feminist geography)
மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
சூழற் புவியியல்[தொகு]
[தொகு]சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாக, சூழற் புவியியல் உருவாகியுள்ளது. மேலும், சூழலுடனான மனிதரின் தொடர்புகள், உலகமயமாதல், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றால் மாற்றம்பெற்று வருவதனால், இந்த மாறுகின்றதும் இயங்குதன்மை கொண்டதுமான தொடர்புகளை விளங்கிக் கொள்வதற்கு புதிய அணுகுமுறையும் தேவைப்பட்டது. பேரழிவு மேலாண்மை (disaster management), சூழல் மேலாண்மை, தாங்குதிறன் (sustainability), அரசியல் சூழலியல் (political ecology) என்பன சூழற் புவியியலின் கீழ் அடங்கும் ஆய்வுப் பரப்புகள் ஆகும்.
புவித்தகவற்கணியவியல்[தொகு]
[தொகு]இலக்கமுறை ஏற்ற மாதிரி (Digital Elevation Model – DEM)
புவித்தகவற்கணியவியல் (Geomatics) என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்துகின்றது. புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல் போன்ற நுட்பங்களைப் பிற துறைகளும் பயன்படுத்துவதனால் புவித்தகவற்கணியவியல் இன்று ஒரு பரந்துபட்ட துறையாக மாறியுள்ளது. இத்துறை, நிலப்படவரைவியல், புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்தல், விண்கோள் நில அளவை முறைமை (Global positioning systems) போன்ற இடஞ்சார் பகுப்பாய்வுகளுடன் கூடிய பலவகை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
மண்டலப் புவியியல்[தொகு]
[தொகு]மண்டலப் புவியியல் (Regional geography), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரையறுப்பது ஆகும். பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து எல்லை வகுப்பதற்கான முறையான நுட்பங்களைத்தன்னுள் அடக்கும் மண்டலமயமாதல் (regionalization) குறித்தும் இது கவனம் செலுத்துகின்றது. மண்டலப் புவியியல், புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு அணுகுமுறையாகவும் கருதப்படுகின்றது.
தொடர்புள்ள துறைகள்[தொகு]
[தொகு]- நகரத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், இடஞ்சார் திட்டமிடல் ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புக்கள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை எவ்வாறு திருத்தியமைக்கலாம் அல்லது திருத்தாமல் விடலாம் போன்ற விடயங்களைப் புவியியல் அறிவு கொண்டு முடிவு செய்யலாம். நகரங்கள், பெருநகரங்கள், நாட்டுப்புறப் பகுதிகள் ஆகியவற்றைத் திட்டமிடுவதைப் பயன்பாட்டுப் புவியியலாகப் பார்க்க முடியும்.
- மண்டல அறிவியல்: 1950ல் வால்ட்டர் இசார்ட் என்பவரால் வழிநடத்தப்பட்ட மண்டல அறிவியல் இயக்கம், புவியியல் பிரச்சினைகளுக்குக் கணிய மற்றும் பகுப்பாய்வு அடிப்படைகளை வழங்குவதற்காக உருவானது. இது மரபுவழியான புவியியல் திட்டங்களின் விளக்கும் போக்கிலிருந்து மாறுபடுகின்றது. மண்டல அறிவியலானது, இடஞ்சார் நோக்கை முக்கியமாகக் கொண்ட, மண்டலப் பொருளியல், வள மேலாண்மை, அமைவிடக் கோட்பாடு, நகர மற்றும் மண்டலத் திட்டமிடல், தகவல் தொடர்பு, மானிடப் புவியியல், மக்கள்தொகைப் பரம்பல், நிலத்தோற்றச் சூழலியல், சூழல் தரம் அறிவுத் தொகுதிகளை உள்ளடக்கியது.
கோள் அறிவியல்கள்[தொகு]
[தொகு]புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் (planetology) எனப்படும்.
முடிவுரை
[தொகு]புவியியல் என்பது புவியியலில் ஒரு பிரிவு ஆகும். இவ்வளர் புவியியல் வாழும் மனித இனத்தின் தரப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைத் தரத்தைச் சுட்டுகிறது. இங்கு வளர்ச்சி என்பது, தொடர்ந்து நிகழக்கூடிய மாற்றம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறிக்கிறது. மாற்றத்திற்குட்பட்டுச் செல்லும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் இவ்வளர் புவியியல் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் வளர்ச்சி என்பது எப்பொழுதுமே நேர்மறையான நிகழ்வாக இருப்பதில்லை. கண்டர் பிராங்க் உலக பொருளாதார சக்தி பற்றி விமர்சனம் செய்யும் போது வளர் புவியியல் என்பது, வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது என்கிறார். இது இவரது சார்ந்திருத்தல் கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.