வளிமண்டலம்
வளிமண்டலம் (atmosphere) என்பது ஈர்ப்பு விசையின் கீழூள்ள கோள் ஒன்றையோ அல்லது போதுமான திணிவைக் கொண்ட ஒரு பொருளையோ சுற்றியுள்ள வளிமங்களின் அடுக்கு ஆகும்.[1]
புவியின் வளிமண்டலம் பொதுவாக நைதரசனால் ஆனது. அத்துடன் இது உயிரினங்களின் மூச்சியக்கத்திற்குத் தேவையான ஆக்சிசன், மற்றும் தாவரங்கள், பாசிகள், நீலப்பச்சைப்பாசிகள் ஆகியவற்றின் ஒளித்தொகுப்புக்குத் தேவையான கார்பனீராக்சைடு ஆகிய வளிமங்களையும் கொண்டுள்ளது. வளிமண்டலம் சூரியவொளியின் புறவூதாக் கதிர்வீச்சு, சூரியக் காற்று, அண்டக் கதிர் ஆகியவற்றினால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்கிறது.
உடு வளிமண்டலம் என்பது விண்மீன் ஒன்றின் வெளிப் பகுதியைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒளிபுகா ஒளிமண்டலத்தில் இருந்தான பகுதியைக் குறிக்கும். குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ள விண்மீன்கள் வெளி வளிமண்டலத்தில் கூட்டு மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Glossary of Useful Scientific Terms". ஒன்ராறியோ அறிவியல் நடுவம். பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Properties of atmospheric strata - The flight environment of the atmosphere பரணிடப்பட்டது 2009-04-21 at the வந்தவழி இயந்திரம்
- Atmosphere - an Open Access journal
- Sanchez-Lavega,, Agustin (2010). An Introduction to Planetary Atmospheres. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-6732-3.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)