தியாகராஜர் ஆராதனை
தியாகராஜ ஆராதனை | |
---|---|
![]() திறுவையாற்றிலுள்ள தியாகராஜர் சமாதி | |
வகை | கருநாடக இசை |
நாள் | ஜனவரி / பிப்ரவரி |
அமைவிடம்(கள்) | தமிழ்நாட்டின் திருவையாற்றில் அமைந்துள்ள தியாகராஜரின் சமாதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலை.[1] |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 1846–தற்போது வரை |
தியாகராஜ ஆராதனை (Tyagaraja Aradhana) என்பது வருடாந்திர ஆராதனையாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருரும் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவரும் தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றியவருமான தியாகராஜரை போற்றி நடத்தப்படும் ஒரு இசைத் திருவிழாவாகும். இது ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இது நிகழ்த்தப்படுகிறது.[2][3] தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில், தியாகராஜர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் கொண்டாடப்படுகிறது.[4][5] அவர் சமாதியான புஷ்ய பகுல பஞ்சமி நாளில் ஆராதனை அனுசரிக்கப்படுகிறது. அங்கு இசைக்கலைஞர்கள் இவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடுவார்கள்.[6][7]
வரலாறு
[தொகு]தியாகராஜரின் மறைந்த ஆண்டு நினைவு நாளில் இந்த ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இது இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் பஞ்சமி அன்று நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆராதனையானது சிறீ தியாகபிரம்ம மகோத்சவ சபையால் நடத்தப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் அமைந்துள்ள தியாகராஜரின் சமாதி வளாகத்தில் ஆராதனை நடத்தப்படுகிறது. [8]
திருவையாறில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆராதனை விழா
[தொகு]2023 - 176வது ஆராதனை விழா - 06 முதல் 11 ஜனவரி 2023 வரை. [9] ஸ்ரீ தியாகபிரம்ம மஹோத்ஸவ சபையின் வருடாந்த ஆராதனை விழா 2023 ஜனவரி 6 ஞாயிற்றுக்கிழமை திருவையாறில் தொடங்கியது. தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விழாவை துவக்கி வைத்தார். பேரவைத் தலைவர் ஜி. கே. வாசன் தொடக்கவுரையாற்றினார்.[10] இரஞ்சினி-காயத்ரி, எஸ். சௌம்யா, அ. கன்னியாகுமாரி, எம்பார் எஸ்.கண்ணன், சிக்கில் குருச்சரண், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜா ராவ், உ. இராஜேஷ், பந்துலா இரமா, ஜெயந்தி குமரேஷ், பிரியதர்ஷினி, பின்னி கிருஷ்ணகுமார், சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் தனிக் கச்சேரி நடத்தினர்.[11] தியாகராஜரின் பெயரில் மகேஷ் மகாதேவ் உருவாக்கி இசையமைத்த புதிய ராகமான ' ஸ்ரீ தியாகராஜா ' [12] இல் பிரியதர்ஷினி பாடிய புதிய கர்நாடக கிருதி 'ஸ்ரீ ராமச்சந்திரம் பஜாமி' 10 ஜனவரி 2023 அன்று தியாகராஜரின் சமாதியில் வெளியிடப்பட்டது.[13] [14] 11 ஜனவரி 2023 அன்று நடத்தப்பட்ட இசைக்கலைஞர்களால் பஞ்சரத்ன கிருதிகளை வழங்கும் விழாவின் முக்கிய நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். இரவி[15] [16] கலந்து கொண்டார்.[17] [11] [18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tirupati: Aradhana Mahotsavam of Sri Thyagaraja held". The New Indian Express. 4 January 2016. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2018/jan/07/tirupati-aradhana-mahotsavam-of-sri-thyagaraja-held-1746629.html.
- ↑ "Ritual Tyagaraja aradhana in Bengaluru this year". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-01-10. Retrieved 2023-02-20.
- ↑ Ashraf, Fathima. "300 artists to pay homage to Thyagaraja at this music festival". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/music/300-artists-to-pay-homage-to-thyagaraja-at-this-music-festival/articleshow/96850180.cms.
- ↑ "Saint Thyagaraja temple, Thiruvaiyaru". templesofindia.org (in ஆங்கிலம்). Retrieved 2023-02-20.
- ↑ "Renovated house of St. Thyagaraja to be inaugurated shortly" (in en-IN). The Hindu. 2010-05-19. https://www.thehindu.com/news/national/tamil-nadu/Renovated-house-of-St.-Thyagaraja-to-be-inaugurated-shortly/article16301942.ece.
- ↑ Friday Review (6 January 2006). "Tiruvaiyaru gears up - CHEN". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/tiruvaiyaru-gears-up/article3216630.ece.
- ↑ Pillai, S. Subramania (2019). Tourism in Tamil Nadu: Growth and Development. MJP Publisher. p. 14. ISBN 978-81-8094-432-1.
- ↑ "Saint Thyagarajar :: Thyagaraja Aradhana Festival". Archived from the original on 25 January 2009. Retrieved 2 March 2009.
- ↑ "Welcome To Thiruvaiyaru Thyagaraja Aradhana". thiruvaiyaruthyagarajaaradhana.org. Retrieved 2023-01-19.
- ↑ "இசையின் இசைவில் திருவையாறு பஞ்சரதன் கீர்த்தனை". ETV Bharat News. Retrieved 2023-01-19.
- ↑ 11.0 11.1 "திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இசையஞ்சலி". Dinamalar. 2023-01-11. Retrieved 2023-01-19.
- ↑ "Sri Tyagaraja - a new creation". www.sruti.com (in ஆங்கிலம்). Retrieved 2023-02-16.
- ↑ Pinto, Arun (2023-01-19). "Sri Tyagaraja - a New Raga in Carnatic Music by Mahesh Mahadev". News Karnataka (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-19.
- ↑ "SamyukthaKarnataka ePaper". 2023-01-25. Archived from the original on 25 January 2023. Retrieved 2023-02-16.
- ↑ "THE HONORABLE GOVERNOR OF TAMIL NADU PARTICIPATED IN THIRUVAIYARU THYAGARAJA ARADHANA FESTIVAL | Thanjavur District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-19.
- ↑ "'Thamizhagam' contributed to the spread of Sanatana culture to the whole of Bharat: Tamil Nadu Governor". https://www.thehindu.com/news/national/tamil-nadu/thamizhagam-contributed-to-the-spreading-of-sanadhana-culture-to-the-whole-of-bharat-tn-governor/article66363706.ece.
- ↑ Maalaimalar (2023-01-10). "திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா- தஞ்சைக்கு இன்று மாலை கவர்னர் ஆர்.என்.ரவி வருகை". www.maalaimalar.com. Retrieved 2023-01-19.
- ↑ "Thiruvaiyaru Thyagabrahma Mahotsava Sabha Celebrated Tyagaraja Aradhana | ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா | Tamil-nadu News in Tamil". zeenews.india.com. Retrieved 2023-01-19.