ஜி. யு. போப் விருது (தமிழ்நாடு அரசு)
Appearance
ஜி. யு. போப் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்பெற்று வருகிறது. இவ்விருதுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டுக் கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.
விருது பெற்றவர்கள் பட்டியல்
[தொகு]வரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | ஜெ.நாராயணசாமி | 2014 |
2 | மதுரை இளங்கவின் | 2015 |
3 | வைதேகி ஹெர்பர்ட் | 2016 |
4 | கோ. இராசேசுவரி கோதண்டம் | 2017 |
5 | கு.கோ. சந்திரசேகரன் நாயர் | 2018 |
6 | மரிய ஜோசப் சேவியர் | 2019 |
7 | முனைவர் உல்ரீகே நிகோலசு[1] | 2020 |
8 | அ.சு. பன்னீர் செல்வன் | 2021 |
9 | முனைவர் அமுதன் அடிகள் | 2022 |
10 | முனைவர் வெ.முருகன் [2], [3] | 2023 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக அரசின் விருதுகள்: பல்வேறு துறை சார்ந்த 77 பேருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்". Hindu Tamil Thisai. 2021-02-01. Retrieved 2025-02-12.
- ↑ "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
- ↑ "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜி.யு.போப் விருது பெற்றோர் (தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம்)