உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த்தாய் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த்தாய் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்று அளித்து சிறப்பிக்கப்படுகிறது.

விருது பெற்ற அமைப்புகள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்ற அமைப்பின் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 மதுரைத் தமிழ்ச் சங்கம் 2012
2 தில்லித் தமிழ்ச் சங்கம் 2013
3 நவி மும்பைத் தமிழ்ச் சங்கம் 2014
4 திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் 2015
5 மாணவர் மன்றம் 2016
6 பெங்களூர் தமிழ்ச் சங்கம் 2017
7 புவனேசுவர் தமிழ்ச் சங்கம் 2018
8 சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019
9 வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் 2020
10 மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2021
11 திருப்பூர் தமிழ்ச்சங்கம் [1] 2022
12 தென்காசித் திருவள்ளுவர் கழகம் [2],[3] 2023

ஆதாரம்

[தொகு]
  • தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
  2. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  3. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
  4. தமிழ்த்தாய் விருது பெற்ற அமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்தாய்_விருது&oldid=4192451" இலிருந்து மீள்விக்கப்பட்டது