சி. பா. ஆதித்தனார் விருது
சி.பா. ஆதித்தனார் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பெற்று நாளிதழ், வாரஇதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவு செய்து, ‘தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார்’ அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் நாளிதழ் விருது, வார இதழ் விருது, திங்களிதழ் விருது என்கின்ற மூன்று விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் என்று மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும், ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை, கேடயம், பாராட்டுரை மற்றும் பொன்னாடை அளிக்கப்பட்டது. ஆனால், 2021 ஆம் ஆண்டிலிருந்து திங்களிதழ் விருது மட்டும் வழங்கப்பெற்று வருகிறது. இவ்விருது ஒவ்வொன்றிற்கும் இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம், பாராட்டுரை மற்றும் பொன்னாடை அளிக்கப்படுகிறது.
விருது பெற்றவர்கள் பட்டியல்
[தொகு]வரிசை எண் | விருதுக்கான இதழ் பிரிவு | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|---|
1 | நாளிதழ் | கி. வைத்தியநாதன் (தினமணி நாளிதழ்) | 2020 |
2 | வார இதழ் | லட்சுமி நடராசன் (கல்கி வார இதழ்) | 2020 |
3 | திங்களிதழ் | இரா. சதாசிவம் | 2020 |
4 | திங்களிதழ் | எஸ். அப்துல் ஹமீது | 2021 |
5 | திங்களிதழ் | முல்லைச்சரம் | 2022 |
6 | திங்களிதழ் | வி.ஆர்.எஸ்.சம்பத் (சட்டக்கதிர்) [1], [2] | 2023 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
- ↑ "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.