சுவாமி கல்யாண் தேவ்
Appearance
சுவாமி கல்யாண் தேவ் | |
---|---|
பிறப்பு | 1876 சூன் 21 உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாக்பட் |
இறப்பு | 2004 சூலை 14 இந்தியா |
இயற்பெயர் | காலூராம் |
தலைப்புகள்/விருதுகள் | பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் |
குரு | பூர்ணானந்தா |
சுவாமி கல்யாண் தேவ்ஜி (1876 சூன் 21 - 2004 சூலை 14) பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது பெற்றவர். இவர் மகாத்மா காந்தி, பண்டித நேரு, மதன்மோகன் மாளவியா போன்ற விடுதலைப்போராட்ட வீரர்களால் சந்திக்கப்பட்டிருந்த துறவி ஆவார். ஒரு நூற்றாண்டு காலம் தமது வாழ்க்கையை முழுவதும் சமுதாய சேவைக்கே அர்ப்பணித்தவர். இவர் விவேகானந்தரை நடந்தே சென்று தரிசித்தவர். தமது குரு பூர்ணானந்தாவால் சந்நியாசம் அளிக்கப்பட்டவர். அப்போதைய பிரதமர் வாஜ்பாயியால் இவரைப்பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது.[1]
மீரட் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டவர்.[2] இவர் கிட்டத்தட்ட முன்னூறு சமுதாய நிறுவனங்களை உருவாக்கியவர். மேற்கு உத்திரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் பல வட மாநிலங்கள் இவரது சேவையால் பயன் பெற்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; மே 2012; பக்கம் 24,25; 128 வயது வரை வாழ்ந்த துறவி!
- ↑ http://www.eng.vedanta.ru/library/prabuddha_bharata/May2005_swami_kalyandev.php