உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சுவாமி கல்யாண் தேவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி கல்யாண் தேவ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

குழலி, ஸ்ரீமத் நாராயண பிரவசனம் என்றால் என்ன? கட்டுரையில் கதைகளை எழுதுவதை தவிர்க்க வேண்டுகிறேன். தேவையான வரலாற்று நிகழ்வை மட்டும் எழுதினால் போது. உயர்வாக எழுதுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:35, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]

Untitled

[தொகு]

மிகைப்படுத்துதல் இருந்தால் கூறுங்கள். திருத்தலாம். ஆனால் உயர்வானவர்களைப் பற்றி உயர்வாக அன்றி வேறெவ்வாறு குறிப்பிடுவது? தகவல்கள் பெரும்பாலும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழில் (மே 2012; பக்கம் 24,25;) உள்ள "128 வயது வரை வாழ்ந்த துறவி!" என்ற கட்டுரையின் அடிப்படையில் அமைந்தவை. --Kuzhali.india (பேச்சு) 06:58, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]

//உயர்வானவர்களைப் பற்றி உயர்வாக அன்றி வேறெவ்வாறு குறிப்பிடுவது// உயர்வானவர்களாக இருப்பதால் தான் இங்கு கட்டுரையே எழுதுகிறோம்! நீங்கள் காட்டும் நூல், இந்து சமயவாதிகளால் எழுதப்பட்டது. அதில் மிகைப்படுத்தி எழுதுவது இயல்பாக இருக்கும். ஆனால், இங்கும் அப்படியே எழுத வேண்டாம் என்றேன். இயல்பாக எழுதினாலே போதும், மிகைப்படுத்துதலை குறையுங்கள் என்றேன்! எடுத்துக்காட்டாக, சமூக சேவகர் என்றாலே உயர்ந்தவர் தான்! தன் வாழ் நாள் முழுவதும், ஊன் உறக்கமின்றி பாடுபட்டார். செல்வத்தை எல்லாம் வாரி வழங்கினார், நாடுதோறும் சென்று மக்களின் மனதில் உற்சாகத்தை அதிகப்படுத்தினார். போன்ற வரிகள் தேவையில்லை. அதே போல், விடுதலைக்குப் பாடுவட்டவரே உயர்ந்தவர் தான்! போராட்டங்களில் பங்கு கொண்டார். உயிர் துறந்தார். போன்ற சொற்களால், தேவையானவற்றை குறிக்கலாம். பிறந்தது முதலே விடுதலை வேட்கை கொண்டிருந்தார். விடுதலை எண்ணம் அவர் நெஞ்சிலேயே நிறைந்திருந்தது. அவர் தாய் உணவுடன் விடுதலை வேட்கையையும் ஊட்டினார் போன்ற வரிகளைத் தவிர்க்கலாம்.

இங்கு மிகைப்படுத்தி எழுதுவதை தவிர்க்கிறோமே ஒழிய அவர்களை மட்டப்படுத்துவதாக எண்ணுவது தவறு. நடுநிலையை பேண வேண்டும். அவ்வளவு தான் :) கதைகளையும் சுருக்குங்கள். ஒவ்வொரு ஊருக்கும் பயணித்தது, தேவையற்ற நிகழ்வுகள் போன்றவற்றை குறையுங்கள். ஸ்ரீ-ல-ஸ்ரீ, ஸ்ரீ, அருள்மிகு, புனித, மேன்மைமிகு, மாண்புமிகு, உயர்திரு, சர் போன்ற சொற்களையும் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். உங்களை குறை கூறுவதாக தவறாக எண்ண வேண்டாம். கட்டுரை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்கான என் கருத்தை தெரிவித்தேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:23, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஒரு சிறுதிருத்தம். எனது கட்டுரைத் தேர்வுகள் ’ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ இதழை இந்து சமய இதழாக மட்டும் தங்களைக் கருதத் தூண்டியிருந்தால் அது தவறு. ’ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ ஆன்மிக பண்பாட்டு இதழ்.அப்பத்திரிக்கை துறவிகளால் நடத்தப்படுவது. இந்து சமயவாதிகள் என்று மட்டும் குறிப்பது சரியான பிரயோகமன்று. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. எனது கட்டுரைகள் விக்கிநடைக்கேற்ப இல்லாமல் இருக்கலாம். அது எனது தவறு. திருத்திக்கொள்கிறேன். -Kuzhali.india

சிரமம் எடுத்து திருத்தியமைக்கு மிக்க நன்றி, குழலி! இந்து சமயவாதியோ, ஆன்மீகவாதியோ யாராகவும் இருக்கட்டும். எழுதுபவர்கள் துறவிகளாகவே இருப்பினும், விக்கிப்பீடியாவில் எந்த சார்பும் இருக்கக் கூடாது! துறவிகள் நற்கருத்தை சொல்வார்கள் என்பது யாவரும் அறிந்ததே! அந்த கருத்துகளை இங்கே குறிப்பிடலாமே அன்றி, புகழ்ச்சி மிகுந்த வரிகள் மட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் ஆதரவாக செயல்படுவது விக்கியில் அனுமதிக்கப்படுவது இல்லை. தவிரவும், சமயவாதி என்ற சொல் சரியான சொல்லே! அதன் பொருளை தவறாக உணர்ந்துகொள்ள வேண்டாம். உட்பொருள் எதுவும் இல்லை. கட்டுரையில் தகவல்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதே கொள்கை. மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு! :) இன்னொரு விசயம், அடிக்கடி தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம். கட்டுரையில் தவறுகளோ, பிழைகளோ இருந்தால் மற்றவர்கள் திருத்தியோ கேட்டோ தெளிவு பெறுவார்கள். நீங்களும் மற்றவர்களின் கட்டுரையில் ஐயம் இருந்தால் கேளுங்கள். (உங்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதாக நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது என்றே இதைச் சொல்கிறேன்) உங்கள் சீரிய பணியை தொடருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:06, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]