சுகர்மம் (யோகம்)
Appearance
இந்திய சோதிடத்தில் சுகர்மா என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் ஏழாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 80° 00' தொடக்கம் 93° 20' வரை "சுகர்மா" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "சுகர்மா" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "சுகர்மா" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
சமசுக்கிருத மொழியில் சுகர்மா என்பது நல்ல வேலை என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் செவ்வாய். ஆட்சித் தேவதை இந்திரன்.[1]
குறிப்புகள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Sastri, Bapu Deva., Surya Siddhanta, Culcutta, 1861.
- Jyotish Vidya - Bith (Nitya) Yoga
- Vedic Time - Pages for the Topic Nitya Yoga பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்