உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவாணி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுவாணி நதி

சிறுவாணி ஆறு கோயம்புத்தூர் நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும், உலகில் மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றாகும். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் இந்த் ஆறு துவங்குகிறது. இது பவானி ஆற்றின் துணை நதியாகும். இந்நதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நுழையும்போது குண்டாற்றுடன் சேருகிறது.

சிறுவாணி அணை

[தொகு]

கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர். இதன்படி கோவை நகரின் "வீட்டு, சமூக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவையான நீரைத்தேக்கிட"' (1300 மில்லியன் கனஅடி) கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது[1]. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. இது கோவை மற்றும் பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயணத்தலமாக விளங்குகிறது.

கோவைக் குற்றாலம்

[தொகு]

சிறுவாணி நீர்வீழ்ச்சி அல்லது கோவைக் குற்றாலம் என்பது சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இங்கு செல்ல அனுமதி கிடையாது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. River disputes in India: Kerala rivers under siege S. N. Sadasivan - 2003 - Business & Economics - 238 pages
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவாணி_ஆறு&oldid=3646062" இலிருந்து மீள்விக்கப்பட்டது