கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துருக்களும், இங்குள்ள சமணக்குன்றுகளில் செயல்பட்டு வந்த மாதேவிப் பெரும்பள்ளிக்கு தானமாக இந்த ஊர் வழங்கப்பட்டதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள குகைக் குன்றுகளில் சமண முனிவர்களுக்கான ஐம்பதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளது. இதை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் பாறையின் முகப்பில் வெட்டப்பட்டுள்ளது. பாகனூரைச் சேர்ந்த பேராதன் பிட்டன் என்பவர் செய்து கொடுத்ததை இக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மூன்றாவதாக உள்ள கல்வெட்டில் பாகனூர் என்ற ஊர்பெயர் காணப்படுகிறது. [1]
இங்குள்ள பாறையில் வடிக்கப்பட்ட தீர்த்தங்கரர்மகாவீரர் சிற்பம், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமண சமயத்தை சீர்திருத்தி பரப்பிய அச்சனந்தி முனிவருக்கு சமர்ப்பிக்கப்பட்டதை, இங்குள்ள வட்டெழுத்து தமிழ் கல்வெட்டு கூறுகிறது.