உள்ளடக்கத்துக்குச் செல்

வீரசந்த் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரசந்த் ராகவ்ஜி காந்தி
வீரசந்த் காந்தி
வீரசந்த் காந்தி
பிறப்பு(1864-08-25)25 ஆகத்து 1864
மகுவா, பவநகர், குஜராத், இந்தியா
இறப்பு7 ஆகத்து 1901(1901-08-07) (அகவை 36)
மகுவார், மும்பை அருகில், இந்தியா
கல்விபி. ஏ., சட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர், சமய சமய அறிஞர்
அறியப்படுவது1893ல் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சமண சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர்.
பெற்றோர்ராகவ் தேஜ்பால் காந்தி
பிள்ளைகள்1
கையொப்பம்வீரசந்த் காந்தியின் கையொப்பம்
1893 உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் வீரசந்த் காந்தி உரையாற்ற உள்ள தலைப்புகள் குறித்தான சுவரொட்டி, சிகாகோ நகரம்
வீரசந்த் காந்தி நினைவு அஞ்சல் தலை, ஆண்டு 2009
1893 உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் இடமிருந்து வலம்: வீரசந்த் காந்தி, அனகாரிக தர்மபால, சுவாமி விவேகானந்தர் மற்றும் காஸ்டன் போனட்-மவுரி

வீரசந்த் ராகவ்ஜி காந்தி (Virachand Raghavji Gandhi) (25 ஆகஸ்டு 1864 – 7 ஆகஸ்டு 1901)[1] வழக்கறிஞரும், சமண சமய அறிஞரும் ஆவார். இவர் 1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சமண சமயத்தின் பிரதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.[2] இவருடன் இந்து சமயத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் மற்றும் பௌத்த சமயத்தின் பிரதியாக இலங்கையின் அனகாரிக தர்மபால கலந்து கொண்டனர்.

வீரசந்த் காந்தி சமணம் மட்டுமின்றி பௌத்தம், வேதாந்தம், கிறித்தவம் மற்றும் மேற்குலக தத்துவங்களை கற்றுத் தேர்ந்தவர். காந்தி சமணத்தின் முக்கிய கொள்கையான அகிம்சையை பரப்பினார். இவர் சமணம் மற்றும் பிற சமயங்கள் குறித்தும், சமூகம் மற்றும் பண்பாட்டு வாழ்வியல் குறித்து 555 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

படைப்புகள்

[தொகு]
  • யேசு கிறிஸ்துவின் அறியப்படாத வாழ்க்கை:பிரான்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு.[3]
  • புனித ஈசாவின் வாழ்க்கை[4]
  • சமணர்களின் சமயம் மற்றும் தத்துவம்[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Howard, Mrs. Charles (April 1902). The Open Court, Vol. 16, Nr. 4 "The Death of Mr. Virchand R. Gandhi". Chicago: The Open Court Publishing Company.
  2. Tribune, India. "Virchand Gandhi – a Gandhi before Gandhi An unsung Gandhi who set course for his namesake". India Tribune. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.
  3. Gandhi, Virchand R. (2003). The Unknown Life of Jesus Christ. Kessinger Publishing. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0766138984.
  4. Gandhi, Virchand R. (2010). The Life of Saint Iss. Kessinger Publishing. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1161579117.
  5. Gandhi, Virchand (1993). Nagīna Jī Śāha (ed.). Religion and philosophy of the Jainas. Jain International.

மேலும் படிக்க

[தொகு]
  • Gandhi, Virchand R. (1970), Dr. K. K. Dixit (ed.), The Systems of Indian Philosophy:Speeches and Writings of Virchand R. Gandhi, Mumbai: Shri Mahavir Jain Vidyalaya Bombay
  • Shubhachandradevsuri (1989), Pannalal R. Shah (ed.), Savirya-Dhyan (in குஜராத்தி), Gandhi, Virchand R. (trans.), Anandnandan Lalan (commentary), Bombay: The Jain Association of India
  • Dr. Bipin Doshi & Preeti Shah (2009), Gandhi Before Gandhi
  • Selected speeches of V. R. Gandhi, 1964 English
Selected speeches taken from books 1, 2, and 3. Publisher – Vallabh Smarak Nidhi, Bombay
  • A tribute to 19th Century Indian Legend: Shri Virchandji Raghavji Gandhi, 2009, English
Edited By Gunvant Barvalia, Mahesh Gandhi, Pankaz Chandmal Hingarh (Published by Pravin C Shah Chair & Prakash Mody – Federation of Jain Association of North America, VRG Committee)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசந்த்_காந்தி&oldid=3777925" இலிருந்து மீள்விக்கப்பட்டது