உள்ளடக்கத்துக்குச் செல்

குவா மூசாங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவா மூசாங் (P032)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Gua Musang (P032)
Federal Constituency in Kelantan
குவா மூசாங் மக்களவைத் தொகுதி
(P032 Gua Musang)
மாவட்டம் கோலா கிராய் மாவட்டம்
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை71,019 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிகுவா மூசாங் தொகுதி
முக்கிய நகரங்கள்குவா மூசாங் மாவட்டம், காலாஸ், குவா மூசாங், சிக்கு, லோஜிங்
பரப்பளவு8,174 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      சுயேச்சை
மக்களவை உறுப்பினர்முகமது அசிசி அபு நாயிம்
(Mohd Azizi Abu Naim)
மக்கள் தொகை112,495 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் குவா மூசாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (82.3%)
  சீனர் (5.8%)
  இதர இனத்தவர் (8.3%)

குவா மூசாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gua Musang; ஆங்கிலம்: Gua Musang Federal Constituency; சீனம்: 话望生国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், குவா மூசாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P032) ஆகும்.[8]

குவா மூசாங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து குவா மூசாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

1986-ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து இந்தத் தொகுதி துங்கு ரசாலி அம்சா என்பவரின் கோட்டையாக இருந்தது. எனினும் 2022-ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் மலேசிய இசுலாமிய கட்சியின் முகமது அசிசி அபு நைம் என்பவரிடம் 163 வாக்குகள் வேறுபாட்டில் தோல்வி அடைந்தார். 8, 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட குவா மூசாங் மக்களவைத் தொகுதி, தீபகற்ப மலேசியாவில் மிகப்பெரிய நாடாளுமன்றத் தொகுதியாகும்.

குவா மூசாங் மாவட்டம்[தொகு]

குவா மூசாங் மாவட்டம், கிளாந்தான் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமாகும். 1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (Kuala Lebir) என்று அழைக்கப்பட்டது. மாநிலத் தலைநகர் கோத்தா பாருவிற்கு தெற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ளது.

குவா மூசாங் மாவட்டத்தின் தெற்கே பகாங் மாநிலம்; கிழக்கே திராங்கானு மாநிலம்; மேற்கே பேராக் மாநிலம்; வடக்கே கோலா கிராய் மாவட்டம்; ஜெலி மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.[10]

குவா மூசாங் நகரம்[தொகு]

குவா மூசாங் என்றால் மரநாய்க் குகை (Civet Cat Cave) என்று பொருள். இந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில் குவா மூசாங் குன்று எனும் ஒரு கற்பாறைக் குன்று உள்ளது. அதன் உயரம் 105 மீட்டர். அதன் உட்புறத்தில் ஒரு பெரிய குகை உள்ளது.

இந்தக் குன்றுக்கும் குவா மூசாங் நகருக்கும் இடையில் ஒரு தொடருந்துப் பாதை உள்ளது. இந்தக் குகையில் நிறைய மர நாய்கள் இருந்ததால், அருகில் குவா மூசாங் நகரத்திற்கும் அந்தப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

குவா மூசாங் மக்களவைத் தொகுதி[தொகு]

குவா மூசாங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் குவா மூசாங் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P029 1986–1990 துங்கு ரசாலி அம்சா
(Tengku Razaleigh Hamzah)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 செமாங்காட் 46
9-ஆவது மக்களவை P032 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 பாரிசான் நேசனல்
(அம்னோ)
11-ஆவது மக்களவை 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–2024 முகமது அசிசி அபு நாயிம்
(Mohd Azizi Abu Naim)
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
2024–தற்போது வரையில் சுயேச்சை

குவா மூசாங் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி முகமது அசிசி அபு நாயிம்
(Mohd Azizi Abu Naim)
21,826 45.12% + 6.28%
பாரிசான் நேசனல் துங்கு ரசாலி அம்சா
(Tengku Razaleigh Hamzah)
21,663 44.78% - 3.82%
பாக்காத்தான் அரப்பான் அசாருன் உஜி
(Asharun Uji)
4,517 9.34% - 3.17%
தாயக இயக்கம் சம்சு அப்தபி மாமத்
(Samsu Abdabi Mamat)
371 0.77% + 0.77%
செல்லுபடி வாக்குகள் (Valid) 48,377 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 743
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 549
வாக்களித்தவர்கள் (Turnout) 49,699 68.86% - 9.59%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 70,254
பெரும்பான்மை (Majority) 163 0.34% - 19.46%
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. "Gua Musang Town Board and Bertam Local Council which was established on 1 March 1984 under Section 3 (1), Local Council Law 1952". mdgm.kelantan.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
  11. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]