உள்ளடக்கத்துக்குச் செல்

குருவிநத்தம், பாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருவிநத்தம்
Kuruvinatham
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
தாலுகாபாகூர்
கொம்யூன்பாகூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எண் -->
607 402
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

குருவிநத்தம் (Kuruvinatham) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் கொம்யூனில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். விழுப்புரத்திலிருந்து திருபுவனை வழியாகக் கடலூருக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளுக்கும் குருவிநத்தம் கிராமமே நுழைவாயிலாக திகழ்கிறது. புதுச்சேரி மாவட்டத்தின் அயலக நகரமான பாகூருக்கு தென்மேற்கு முனையில் இக்கிராமம் அமைந்துள்ளது.

எல்லைகள்

[தொகு]

மேற்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்பணம்பாக்கம் கிராமம், வடக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கரைமேடு கிராமம், கிழக்கில் பாகூர் மற்றும் பரிக்கல்பட்டு கிராமங்கள், தெற்கில் சோரியாங்குப்பம் ஆகியனவை குருவிநத்தம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து

[தொகு]

குருவிநத்தம் சாலை வழியாக பாகூருடன் இணைக்கப்பட்டுள்ளது. கடலூர் – பள்ளிநெல்லியனூர் பிரதான மாவட்டச்சாலை குருவிநத்தம் வழியாகச் செல்கிறது. மேலும் புதுச்சேரிசோரியாங்குப்பம் பேருந்துச்சாலை குருவிந்ததம் கிராமத்துடன் இணைக்கிறது. பாகூர் வழியாகச் செல்லும் கடலூர்விழுப்புரம் பேருந்துகள் குருவிநத்தத்தை இணைக்கின்றன.

அரசியல்

[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், பாகூர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் குருவிநத்தம் கிராமம் இருக்கிறது. தொடக்கக் காலத்தில் குருவிநத்தம் கிராமம் தனி சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதிச் சீரமைப்பில் குருவிநத்தம் சட்டப்பேரவைத் தொகுதி சிதைக்கப்பட்டது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிநத்தம்,_பாகூர்&oldid=3699539" இலிருந்து மீள்விக்கப்பட்டது