கிருமாம்பாக்கம்
கிருமாம்பாக்கம் Kirumampakkam | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | பாண்டிச்சேரி |
வட்டம் (தாலுகா) | பாகூர் |
ஒன்றியம் | பாகூர் |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எண் --> | 607 402 |
தொலைபேசிக் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
கிருமாம்பாக்கம் (Kirumampakkam ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். தேசிய நெடுஞ்சாலை 45ஏ – கடலூர் சாலையில் புதுச்சேரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
எல்லைகள்
[தொகு]மேற்கில் தமிழ்நாட்டின் நாகப்பனூர் கிராமம், வடக்கில் தமிழ்நாட்டின் மடப்பட்டு கிராமம், கிழக்கில் பனித்திட்டு கிராமம், தெற்கில் பிள்ளையார் குப்பம் ஆகியன கிருமாம்பாக்கம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன கிருமாம்பாக்கம் பகுதியில் நெல் மணிலா கரும்பு ஆகிய பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது கிருமாம்பாக்கத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரை அமைந்துள்ளது சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு ஏரிகள் புரன் அமைக்கப்பட்டு கிருமாம்பாக்கம் பகுதியில் பகுத்தறிவுடன் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் சில சமூக ஆர்வலர்கள் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியான சமூகத்திற்கு எனக்காகவும் மகேஷ் குமார் என்பவர் மற்றும் நந்தா என்பவர் தொடர்ச்சியாக பாடுபட்டு வருகின்றார்கள்
சாலைப் போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 45ஏ – கிருமாம்பாக்கம் கடலூர் சாலை வழியாக புதுச்சேரியுடன் இணைகிறது. மேலும் கிருமாம்பாக்கம் – பாகூர் சாலை கிருமாம்பாக்கத்தை பாகூருடன் இணைக்கிறது. இவ்வொன்றியத்தின் தலைமையிடமான கிருமாம்பாக்கம் தமிழ்நாட்டுக் கிராமம் நாகப்பனூர் கிராமத்திற்கு நுழைவாயிலாக உள்ளது.
அரசியல்
[தொகு]புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் கிருமாம்பாக்கம் கிராமம் இருக்கிறது.
படக்காட்சியகம்
[தொகு]-
கிருமாம்பாக்கம் கிராமப் பஞ்சாயத்தின் வரைபடம்
-
கிருமாம்பாக்கம் , பாகூர் ஒன்றியம்
-
கிருமாம்பாக்கம் கிராமப் பஞ்சாயத்து, பாகூர் ஒன்றியம் வரவேற்புப் பலகை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.