சோரியாங்குப்பம்
சோரியாங்குப்பம் Soriyankuppam | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | பாண்டிச்சேரி |
வட்டம் (தாலுகா) | பாகூர் |
ஒன்றியம் | பாகூர் |
மொழிகள் | |
• அலுவல் பூர்வம் | தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எண் --> | 607 402 |
தொலைபேசிக் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
சோரியாங்குப்பம் (Soriyankuppam), என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான, புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1] புதுச்சேரியில் இருந்து சாவடி வழியாகப் பண்ருட்டி செல்லும் பாதையில் மாற்றுப்பாதையாக சோரியாங்குப்பம் சாலை பயன்படுகிறது. புதுச்சேரி மாவட்டத்தின், அயலகச் சிற்றூரான பாகூருக்கு தென்மேற்கு முனையில் இக்கிராமம் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
[தொகு]"ஜோதிலிங்கக் குப்பம் "என்பதே இவ்வூரின் தொடக்கக்காலப் பெயராகும். இங்குள்ள ஆலயத்தின் சிவலிங்கத்தின் பெயரால் இவ்வூர் இப்பெயர்ப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பின்னாட்களில் இப்பெயர் திரிந்தும், மருவியும் சோரியங்குப்பம் என்று அழைக்கப்படுகிறது.
எல்லைகள்
[தொகு]மேற்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டைராவிலாகம் கிராமம், வடக்கில் குருவிநத்தம் கிராமம், கிழக்கில் பரிக்கல்பட்டு கிராமம் மற்றும் தெற்கில் தென்பெண்ணை ஆறு ஆகியன சோரியாங்குப்பம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.
சாலைப் போக்குவரத்து
[தொகு]சோரியாங்குப்பம் சாலை வழியாக பாகூருடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வொன்றியத்தின் தலைமை இடமான கடலூர் – பள்ளிநெல்லியனூர் பிரதான மாவட்டச்சாலை சோரியாங்குப்பம் வழியாகச் செல்கிறது. மேலும் புதுச்சேரி – சோரியாங்குப்பம் பேருந்துச்சாலை சோரியாங்குப்பத்தை நேரடியாக புதுச்சேரியுடன் இணைக்கிறது.
அரசியல்
[தொகு]புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், பாகூர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் சோரியாங்குப்பம் கிராமம் இருக்கிறது.
படக்காட்சியகம்
[தொகு]-
சோரியாங்குப்பம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகம், பாகூர் ஒன்றியம்
-
சோரியாங்குப்பம் கிராமப் பஞ்சாயத்து, அங்கன்வாடி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.