மனமேடு
மனமேடு Manamedu | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | பாண்டிச்சேரி |
வட்டம் (தாலுகா) | பாகூர் |
ஒன்றியம் | பாகூர் |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் --> | 607 402 |
அஞ்சல் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
மனமேடு (Manamedu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். புதுச்சேரியின் 11 அயலகச் சிற்றூர்களில் மனமேடும் ஒன்றாகும். பெண்ணையாற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கிராமம், புதுச்சேரி - நெல்லிக்குப்பம் சாலைக்கு நுழைவாயிலாக இருக்கிறது.
வரலாறு[தொகு]
ஆற்றங்கரையின் உயரமான பகுதியாக இருப்பதால் இவ்வூருக்கு மனமேடு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மணல்மேடு என்ற சொல் காலப்போக்கில் மனமேடு என்றும் அழைக்கப்படுகிறது.
புவியியல்[தொகு]
ஒன்றியத் தலைமையிடமான பாகூருடன் மனமேடு எல்லைபுற சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மனமேடு பகுதியில், பெண்ணையாற்றின் குறுக்காக ஒரு பாலம் கட்டப்பட்டுவருகிறது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றவுடன், புதுச்சேரி – நெல்லிக்குப்பம் சாலைக்கு இன்றியமையாத ஒரு பாலமாகத் திகழப்போகிறது.
கிராமங்கள்[தொகு]
மணமேடு கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.
- மணமேடு
- கடுவனூர்
அரசியல்[தொகு]
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ,நெட்டப்பாக்கம் தொகுதியின் ஒரு பகுதியாகவும் மணமேடு கிராமம் இருக்கிறது.
படக்காட்சியகம்[தொகு]
-
மனமேடு கிராமப் பஞ்சாயத்து வரைபடம்
-
மனமேடு, பாகூர் ஒன்றியம் தண்ணீர்த் தொட்டி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-27.