உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்சி (உத்தராகண்டம்)

ஆள்கூறுகள்: 30°10′46.2″N 80°51′27″E / 30.179500°N 80.85750°E / 30.179500; 80.85750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்சி
குஞ்சி is located in உத்தராகண்டம்
குஞ்சி
குஞ்சி
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் குஞ்சி கிராமத்தின் அமைவிடம்
குஞ்சி is located in நேபாளம்
குஞ்சி
குஞ்சி
குஞ்சி (நேபாளம்)
ஆள்கூறுகள்: 30°10′46.2″N 80°51′27″E / 30.179500°N 80.85750°E / 30.179500; 80.85750
நாடுஇந்தியா
பரப்பளவு
 • மொத்தம்189 km2 (73 sq mi)
ஏற்றம்
3,200 m (10,500 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்335
 • அடர்த்தி1.8/km2 (4.6/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUK

குஞ்சி(Gunji), இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டம், தார்ச்சுலா வருவாய் வட்டம், இமயமலையில் 3200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கிராம ஊராட்சி ஆகும். இக்கிராமம் இந்திய-நேபாள நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ளது. குத்தி பள்ளத்தாக்கில் அமைந்த இக்கிராமத்தில் சாரதா ஆறு எனும் காளி ஆறு பாய்கிறது. இதனருகில் குத்தி, நாபி கிராமங்கள் உள்ளது.[1]குஞ்ஜி கிராமம் வழியாக ஆதி கைலாசம், ஓம் பர்வதம், மானசரோவர் மற்றும் கயிலை மலைக்கு புனித யாத்திரை செல்லலாம்.[2]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 194 குடும்பங்கள் கொண்ட குஞ்சி கிராமத்தின் மக்கள் தொகை 335 ஆகும். சராசரி எழுத்தறிவு 87.66% ஆகும். இக்கிராமத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11 மற்றும் 195 ஆக உள்ளனர்.[3]

சுற்றுலா

[தொகு]

குஞ்சி கிராமம் வழியாக ஆதி கைலாசம், ஓம் பர்வதம், மானசரோவர் மற்றும் கயிலை மலைக்கு மலையேற்றம் மற்றும் யாத்திரை செல்பவர்கள், தார்ச்சுலா எனும் ஊரில் ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்து, உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How three villages Nepal eyes changed their fortune - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 20 December 2021. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
  2. Walton, H. G., ed. (1911), Almora: A Gazetteer, District Gazetteers of the United Provinces of Agra and Oudh, vol. 35, Government Press, United Provinces, p. 229 – via archive.org
  3. Gunji Population - Pithoragarh, Uttarakhand
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சி_(உத்தராகண்டம்)&oldid=4048433" இலிருந்து மீள்விக்கப்பட்டது