உள்ளடக்கத்துக்குச் செல்

குப்தகாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குப்தகாசி
गुप्तकाशी
ஊர்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரகண்ட்
கோட்டம்கார்வால் கோட்டம்
மாவட்டம்ருத்ரபிரயாக்
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUK
ரிஷிகேசிலிருந்து தொலைவு178 கிலோமீட்டர்கள் (111 mi) (சாலை வழியாக)
இணையதளம்uk.gov.in


குப்தகாசி (Guptakashi), இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின், கார்வால் கோட்டத்தில், ருத்திரபிரயாக் மாவட்டத்தின் சிவாலிக் மலையில் 1319 மீட்டர் உயரத்தில் அமைந்த சிறு புனித கோயில் தலமாகும். குப்தகாசியில் உள்ள மிகப் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிறப்பு பெற்றதாகும். குப்தகாசி பாண்டவர்களுடன் தொடர்புடைய ஊர்களில் ஒன்றாகும்.[1][2][3]

நான்கு சிறு புனித தலங்கள் மற்றும் பஞ்ச கேதார தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் குப்தகாசி அமைந்துள்லது.

குளிர்காலத்தில் கேதார்நாத் கோயிலின் உற்சவரான சிவன் விக்கிரகத்தை, குப்தகாசியில் பாயும் மந்தாகினி ஆற்றின் எதிர் கரையில் உள்ள உக்கிமடத்தில் வைத்து பூஜை செய்வர்.

அடையும் வழி

[தொகு]

ரிஷிகேஷ் நகரத்திலிருந்து 178 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குப்தகாசியை சாலை வழியாக அடையலாம்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bond, Ruskin. Magic Place, A: Book 7. Orient Blackswan. pp. 26–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2584-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125025849. பார்க்கப்பட்ட நாள் 2009-08-16. {{cite book}}: |work= ignored (help)
  2. "Shankaracharya Samadhi". Guptakashi. Garhwal Mandal Vikas Nigam, A Government of Uttrakhand Enterprise. Archived from the original on 2009-05-20. பார்க்கப்பட்ட நாள் 2009-08-16.
  3. "Guptkashi". National Informatics Centre, Rudraprayag. Archived from the original on 2009-06-04. பார்க்கப்பட்ட நாள் 2009-08-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்தகாசி&oldid=3581765" இலிருந்து மீள்விக்கப்பட்டது