உள்ளடக்கத்துக்குச் செல்

இராமர் தொங்கு பாலம்

ஆள்கூறுகள்: 30°07′24″N 78°18′52″E / 30.123238°N 78.314438°E / 30.123238; 78.314438
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் தொங்கு பாலம்
Ram Jhula
முனி கி ரெதி எனும் ஊரில் கங்கை ஆற்றை கடக்க உதவும் இராம் ஜுலா எனும் தொங்கு பாலம்
போக்குவரத்து பாதசாரிகள், இருசக்ர மோட்டார் வண்டிகள் மற்றும் மிதி வண்டிகள்
தாண்டுவது கங்கை ஆறு
இடம் ரிஷிகேஷ்
வடிவமைப்பு தொங்கு பாலம்
திறப்பு நாள் 1986

இராம் ஜூலா (Ram Jhula) (இந்தி: राम झूला), இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலம், தெக்ரி கர்வால் மாவட்டம், முனி கி ரெதி ஊரில் பாயும் கங்கை ஆற்றை மேற்கிலிருந்து கிழக்கில் கடக்க உதவும் 750 அடி நீளம் கொண்ட தொங்கு பாலம் ஆகும்.[1] இப்பாலம் மேற்கில் சிவானந்தரின் தெய்வ நெறிக் கழகத்தையும், கிழக்கில் சுவர்க்க ஆசிரமத்தையும் இணைக்கிறது. இராம் ஜூலாவிற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குமணன் தொங்கு பாலம் ரிஷிகேசை இணைக்கிறது. [2] இது 1986ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த தொங்கு பாலம் ரிஷிகேஷ் மற்றும் முனி கி ரெதி ஆகிய ஊர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இப்பாலத்தில் பாதசாரிகள், மிதி வண்டி இருசக்கர மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஓட்டுபவர்கள் மட்டும்

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமர்_தொங்கு_பாலம்&oldid=4041672" இலிருந்து மீள்விக்கப்பட்டது