கபிலாச வனவிலங்கு சரணாலயம்
கபிலாச வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
କପିଳାଷ ବନ୍ୟଜନ୍ତୁ ସଂରକ୍ଷଣାଳୟ | |
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அருகாமை நகரம் | டேங்கானாள் |
ஆள்கூறுகள் | 20°42′27″N 85°48′06″E / 20.7073695°N 85.8017064°E |
பரப்பளவு | 125.5 கிலோமீட்டர்கள் (78.0 mi) |
அதிகாரப்படுத்தப்பட்டது | ஏப்ரல் 2, 2011[1] |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், ஒடிசா அரசு |
கபிலாச வனவிலங்கு சரணாலயம் (Kapilasa Wildlife Sanctuary) அல்லது கபிலாசு வனவிலங்கு சரணாலயம் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் தேன்கானாள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியில் 125.5 km2 (48 sq mi) பகுதி முழுவதும் பரவியுள்ளது. இது கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள் சுற்றுச்சூழல் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னணி
[தொகு]இந்த வனவிலங்கு சரணாலயம் 2 ஏப்ரல் 2011 அன்று முதல் செயல்படத் தொடங்கியது. இந்தியச் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 4 சூலை 2014 அன்று வரைவு வர்த்தமானி மூலம் இது சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (ESZ) அறிவிக்கப்பட்டது. சரணாலயத்தின் விரிவாக்கப்பட்ட பகுதியுடன் இப்போது 393.87 சதுர கிலோமீட்டர்கள் (152.07 sq mi) பகுதியில் அருகிலுள்ள 36 கிராமங்களுடன் அமைந்துள்ளது.[2]
சுற்றுலா
[தொகு]மாநிலத்தின் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கான இதன் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒடிசா அரசாங்கம் 2016-ல் கபிலாசாவை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்துவதில் தனது விருப்பத்தை அறிவித்தது.[3]
சுற்றுச்சூழல் சுற்றுலா
[தொகு]2016ஆம் ஆண்டில் காடுகளின் பொதுத் தலைமைப் பாதுகாவலரின் கூற்றுப்படி, சுற்றுச்சூழல் சுற்றுலா இயக்கத்தின் ஒரு பகுதியாகச் சுற்றுச்சூழல் குடிசைகள் மற்றும் படகு சவாரி வசதிகள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.[3]
அணுகல்
[தொகு]கட்டக் மாவட்டம் அல்லது தேன்கானாள் மாவட்டத்திலிருந்து சாலைப் போக்குவரத்து மூலம் வன காப்பகத்தை அடையலாம். இந்த நகருக்குத் தொடருந்து மற்றும் சாலை போக்குவரத்து இணைப்புகள் எளிதாக இருப்பதால் தேன்கானாள் நகரத்திலிருந்து சரணாலயத்தை அணுகுவது எளிதாக உள்ளது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
[தொகு]இந்த சரணாலயத்தில் குங்கிலியம் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.[2] நெல்லி, கரு மருது, வில்வம், பீஜா, தௌரா, கமபரி, ஜமு , கடம்பு, கஞ்சன், இருவேல், புங்கை, முள்வேங்கை, கெந்து, தேக்கு, பூக்கம், மஞ்சக்கடம்பு, மாம்பழம், கொண்டைக் கரந்தை, பாசி, வாகை, ஆகியவை குறிப்பிடத்தக்க மற்ற தாவரங்கள் ஆகும் .
சரணாலயத்தின் மையப் பகுதியில் லேமியாசி தாவரங்கள் காணப்பட்டன.[4]
முக்கியமான விலங்கினங்களில் ஆசிய யானை, வங்காள நரி, பொன்னிறக் குள்ளநரி, சாம்பல் லாங்கூர், இந்திய முகடு முள்ளம்பன்றி, இந்திய மலை அணில்,[5] இந்திய மயில், கடமான், வரிக் கழுதைப்புலி, காட்டுப்பன்றி,[2] மற்றும் பல்வேறு வகையான பறவைகள், பல்லிகள் முதலியன.
உயிரியல் பாதுகாப்பு
[தொகு]பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் கனரக தொழில்மயமாக்கல் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் காரணமாக இந்த சரணாலயம் பாதிக்கப்படுவதால், வனவிலங்கு பாதுகாப்புக் குழுக்கள் இச்சரணாலயப் பாதுகாப்பிற்காகப் போராட்டங்களை நடத்தியுள்ளன.[6][7][8][9][10]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sanctuaries in Odisha - A quick glance". odishawildlife.org. Archived from the original on 24 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Draft Notification of the Kapilash Wildlife Sanctuary - Declaration as Eco-sensitive Zone in the State of Odisha". Ministry of Environment, Forest and Climate Change. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
- ↑ 3.0 3.1 Ramanath V, Riyan (14 Jan 2016). "Kapilash sanctuary to be made tourist hub". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Kapilash-sanctuary-to-be-made-tourist-hub/articleshow/50571680.cms.
- ↑ Misra, R. C.; Das, G. (19 April 2015). "Ocimum kilimandscharicum Guerke (Lamiaceae): A New Distributional Record for Peninsular India with Focus on its Economic Potential". Proceedings of the National Academy of Sciences, India Section B: Biological Sciences 86 (4): 795–803. doi:10.1007/s40011-015-0526-9.
- ↑ "Guardians Of Tomorrow – The Sanctuary Wildlife Awards 2015". Sanctuary Asia XXXIV (6). 6 Dec 2014.
- ↑ Shukla, Avay (16 June 2015). "Can we trust Mr. Javadekar with our environment?". hillpost.in.
- ↑ Sinha, Neha (27 Feb 2016). "Our Eclipsed View of Conservation is Driving Human-Animal Conflicts". thewire.in. https://thewire.in/22909/our-eclipsed-view-of-conservation-is-driving-human-animal-conflicts/.
- ↑ "Row over construction of thermal plant near wildlife sanctuary". தி இந்து. 8 Dec 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/row-over-construction-of-thermal-plant-near-wildlife-sanctuary/article2697253.ece.
- ↑ Patnaik, Lalmohan (25 Aug 2012). "Factories in wildlife zones face scrutiny". The Telegraph (Calcutta). https://www.telegraphindia.com/1120826/jsp/odisha/story_15897319.jsp.
- ↑ Dash, Jayajit (19 Mar 2014). "Odisha nudges MoEF for wildlife nod to KVK Nilachal's project". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/companies/odisha-nudges-moef-for-wildlife-nod-to-kvk-nilachal-s-project-114031300792_1.html.