சட்கோசியா புலிகள் காப்பகம்
சட்கோசியா புலிகள் காப்பகம் (Satkosia Tiger Reserve) ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான அனுகோள் மாவட்டத்திலுள்ள புலிகள் காப்பகமாகும். 988.30 கி.மீ2 பரப்பளவில் இவ்விலங்குக் காப்பகம் பரந்து விரிந்துள்ளது [1].
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் மகாநதி பாய்ந்து செல்லும் 22 கிலோமீட்டர் ஆழ்பள்ளத்தாக்கில், கிழக்கு மேட்டு நில ஈர இலையுதிர் காட்டுச்சூழல் மண்டலத்தில் சட்கோசியா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. சால் போன்ற கலப்பு இலையுதிர் காடுகள் வகைத் தாவரங்களும் ஆற்றோர வயலும் வயல்சார்ந்த தாவரங்களும் இங்கு அதிகமாக உள்ளன [2]. சட்கோசியா ஆழ்பள்ளத்தாகு வனவிலங்குகள் சரணாலயம் 1976 ஆம் ஆண்டு 796 கி.மீ2 பரப்பளவில் உருவாக்கப்பட்டது [3]. 2007 ஆம் ஆண்டில் அருகிலிருந்த பேய்சிப்பள்ளி வனவிலங்கு சரணாலயத்தையும் உள்ளடக்கி இங்கு சட்கோசியா புலிகள் காப்பகம் வடிவமைக்கப்பட்டது [4].