கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள்
கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள் Eastern Highlands moist deciduous forests | |
---|---|
வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகள், கம்பாலகொண்ட வன உயிர் காப்பகம், ஆந்திரப் பிரதேசம் | |
சுற்றுச்சூழல் பகுதி அமைவிடம் | |
சூழலியல் | |
மண்டலம் | இந்தோ-இமலாயப் பெரும்பகுதி |
பல்லுயிர்த் தொகுதி | வெப்பமண்டல மித வெப்பமண்டல அகண்ட இலைக் காடுகள் |
எல்லைகள் | பட்டியல்
|
பறவை இனங்கள் | 313 |
புவியியல் | |
பரப்பளவு | 341,100 km2 (131,700 sq mi) |
நாடு | இந்தியா |
மாநிலங்கள் | ஆந்திரப் பிரதேசம், சத்தீசுகர், சார்க்கண்டு, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஒடிசாமற்றும் தெலங்காணா |
19°12′N 80°30′E / 19.200°N 80.500°E | |
வளங்காப்பு | |
வளங்காப்பு நிலை | Critical/endangered[1] |
பாதுகாக்கப்பட்டது | 3.97% |
கிழக்கு மேட்டுநில ஈரமான இலையுதிர் காடுகள் (Eastern Highlands moist deciduous forests), அல்லது கிழக்கு டெக்கான் ஈரமான இலையுதிர் காடுகள், என்பது கிழக்கு-மத்திய இந்தியாவில் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல ஈரமான அகல இலைக் காடுகள் உள்ள சுற்றுச்சூழலாகும். இந்த வாழிடம் 341,100 சதுர கிலோமீட்டர்கள் (131,700 sq mi), பரப்பில் ஆந்திரா, சத்தீசுகர், சார்க்கண்டு, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, ஒடிசா மற்றும் தெலங்காணா மாநிலங்களில் பரவியுள்ளது.
அமைத்தல்
[தொகு]கிழக்கு மேட்டுநில ஈரமான இலையுதிர் காடுகள் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசாவின் வங்காள விரிகுடாவிலிருந்து , கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் வடக்கு பகுதி மற்றும் வடகிழக்கு தக்காணப் பீடபூமி வழியாகக் கிழக்கு சாத்பூரா மலைத்தொடர் மற்றும் மேல் நருமதை பள்ளத்தாக்கு வரை பரவியுள்ளன.
தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள வங்காள விரிகுடாவிலிருந்து பருவப் பெயர்ச்சி காற்று காரணமாகச் சுற்றுச்சூழலின் காடுகள் நீடிக்கின்றன. மத்திய தக்காணப் பீடபூமி தென்மேற்கு மற்றும் மேற்கில் வறண்ட இலையுதிர் காடுகள், வடமேற்கில் நர்மதா பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் வடக்கே சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ளிட்ட வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகளினால் சூழப்பட்டுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்கு மேற்கே அமைந்துள்ள வறண்ட வடக்கு வறண்ட இலையுதிர் காடுகள், கிழக்கு மேட்டுநில ஈரமான இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது. மலைத்தொடரின் மழை மறைவு பிரதேசம், வங்காள விரிகுடாவில் ஈரப்பதம் நிறைந்த பருவமழை காற்றை ஓரளவு தடுக்கிறது. ஈரப்பதமான ஒரிசா அரை-பசுமையான காட்டுச் சுற்றுச்சூழல் ஒரிசாவின் கடலோர தாழ் நிலங்களில் வடகிழக்கில் அமைந்துள்ளது.
தாவரங்கள்
[தொகு]இந்த சூழ்நிலைப் பிரதேச காடுகளில் அதிக அளவில் குங்கிலியம், (சோரியா ரோபசுடா) காணப்படுகிறது. இதனுடன் தெர்மினலியா, ரூபனியரின், டேனா, சைஜியம், பூச்சானியா, கிளிசிடானந்தசு மற்றும் அனோஜெச்சசு மண் வகைகளுக்கு தக்கவாறு காணப்படுகிறது. இங்குக் காணப்படும் பல தாவரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு இமயமலையின் ஈரமான காடுகள் காணப்படுபவையாக உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும்பலா போன்ற தாவரங்களும், ஷெஃப்லெரா கொடியின் ( ஸ்கெஃப்லெரா வெனுலோசா ), கூட்டு ஃபிர் ( க்னெட்டம் உலா ) மற்றும் வஞ்சி மரம் போன்ற பல லியானாக்களும் அடங்கும்.
கிழக்கு இமயமலையில் காணப்படும் தனித்துவமுடைய இந்திய மிளகு மரம் மற்றும் பல புதர்கள், மூலிகைகள் மற்றும் மஞ்சள் இமயமலை ராஸ்பெர்ரி, தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி ( போஹ்மேரியா மேக்ரோபில்லா ) மற்றும் விப் கார்ட் கோப்ரா லில்லி ஆகியவை அடங்கும்.
உலகளவில் அச்சுறுத்தப்பட்ட பல தாவரச் சிற்றினங்கள் இந்த வாழிடச் சுற்றுச்சூழலில் காணப்படுகின்றன, இதில் இரண்டு உள்ளூர் தாவரங்களான லூகாசு முகர்ஜியானா மற்றும் பிளெபோபில்லம் ஜெய்போரென்சிசு ஆகியவை அடங்கும் .
-
வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காட்டின் உள்ளே
-
காடுகளில் அதிகமாக காணப்படும் சால் மரங்கள்
-
குளிர்காலத்தில் சிறப்பியல்பு மஞ்சள்-வெள்ளை சால்-பூக்கள்
-
டெர்மினியா, குறிப்பாக கரு மருது (இந்திய லாரல்)
-
மூங்கில், சிறுமூங்கில், இந்த சுற்றுச்சூழலின் பல பகுதிகளில் முக்கியமானது
-
மேற்குத் தொடர்ச்சி மலையுடன் பொதுவான தாவரங்களில், லியானாக்கள்
-
கிழக்கு இமயமலையினைச் சார்ந்த இந்திய மிளகு மரம்
விலங்குகள்
[தொகு]இந்த சுற்றுச்சூழலில் வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகளின் பெரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் காணப்படும் பெரும் பாலூட்டிகளாக வங்காளப் புலி, ஓநாய், செந்நாய், மற்றும் தேன் கரடி, இந்தியக் காட்டெருது, நாற்கொம்பு மான், புல்வாய், இந்தியச் சிறுமான் ஆகியன. ஒரு காலத்தில் வாழ்ந்த ஆசிய யானைகள் நீண்ட காலத்திற்கு முன்பே அழிந்துவிட்டன.
இந்தச் சுற்றுச்சூழலில் காணப்படும் ஒரே அகணிய உயிரி குகைகளில் வசிக்கும் கஜூரியாவின் இலை மூக்கு வெளவால் ஆகும் .
-
தேன் கரடிகள்
-
இந்த சுற்றுச்சூழலின் சில பகுதிகளில் இந்தியக் காட்டெருது
-
இந்த சுற்றுச்சூழலில் (சவுசிங்கா) பல வகையான ஆன்டிலோப் மற்றும் மான் இனங்கள் வாழ்கின்றன
-
உலகளவில் அச்சுறுத்தப்பட்ட அதீனா மீன் கழுகு இங்கு காணப்படுகிறது
-
உலகளவில் அச்சுறுத்தப்பட்ட பசுமை அவதாவத், இந்த சுற்றுச்சூழலில் தஞ்சம் அடைந்துள்ளது
பாதுகாப்பு
[தொகு]இதன் அசல் வாழ்விடங்களில் ஏறக்குறைய 25% உள்ளது. இதில் பெரும்பகுதி 5000 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது அல்லது பெரிய பரப்பிலானது. இங்கு 31 பாதுகாக்கப்பட்ட பகுதிகள், 13,540 சதுர கிலோ மீட்டர் பரப்பில், இச்சுற்றுச்சூழலின் 4% பரப்பில் இவ்வாழ்விடத்தைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது. இச்சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் உள்ளது.[2]
- அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம், சத்தீசுகர் (550 km²)
- படல்கோல் வனவிலங்கு சரணாலயம், சத்தீசுகர் (120 km²)
- பைசிபள்ளி வனவிலங்கு சரணாலயம், ஒடிசா (170 km²)
- பாலிமேலா வனவிலங்கு சரணாலயம், ஒடிசா (130 km²)
- பர்னாவபரா வனவிலங்கு சரணாலயம், சத்தீசுகர் (240 km²)
- பைரம்கர் வனவிலங்கு சரணாலயம், பிஜாப்பூர் மாவட்டம், சத்தீசுகர் (160 km²)
- போரி வனவிலங்கு சரணாலயம், ஹோஷங்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம் (460 km²)
- எதுர்நாங்கரம் வனவிலங்கு சரணாலயம், வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா (120 km²)
- ஹட்கர் வனவிலங்கு சரணாலயம், ஒடிசா (140) km²)
- இந்திராவதி தேசியப் பூங்கா, பிஜாப்பூர் மாவட்டம், சத்தீசுகர் (1,150 km²)
- கம்பலகொண்ட வனவிலங்கு சரணாலயம், விசாகப்பட்டினம், ஆந்திரா (70) km²)
- கன்கா தேசியப் பூங்கா, மாண்ட்லா மற்றும் பாலகாட் மாவட்டங்கள், மத்தியப் பிரதேசம் (900 km²)
- கார்லாபட் வனவிலங்கு சரணாலயம், ஒடிசா (150 km²)
- காவல் வனவிலங்கு சரணாலயம், ஆதிலாபாத் மாவட்டம், தெலங்காணா (1,080 km²)
- கின்னெராசனி வனவிலங்கு சரணாலயம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா (290 km²)
- கொல்லேரு வனவிலங்கு சரணாலயம் (480 km², ஓரளவு மத்திய டெக்கான் பீடபூமியில் வறண்ட இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழல்).
- கோண்டகாமேரு வனவிலங்கு சரணாலயம், ஒடிசா (400 km²)
- கோட்கர் வனவிலங்கு சரணாலயம், ஒடிசா (400 km²)
- லக்கரி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம், கஞ்சம் மாவட்டம், ஒடிசா (180 km²)
- இலஞ்சமடுகு வனவிலங்கு சரணாலயம், கரீம்நகர் மாவட்டம், தெலுங்கானா (80 km²)
- மஹுவதூர் வனவிலங்கு சரணாலயம், ஜார்க்கண்ட் (60) km²)
- பச்மரி வனவிலங்கு சரணாலயம், மத்தியப் பிரதேசம் (500 km²)
- பக்கல் வனவிலங்கு சரணாலயம், வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா (120 km²)
- பாமிட் வனவிலங்கு சரணாலயம், சத்தீஸ்கர் (60 km²)
- பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள், ஆந்திரா (530 km²)
- ஃபென் வனவிலங்கு சரணாலயம், மாண்ட்லா மாவட்டம், மத்தியப் பிரதேசம் (100 km²)
- பிரணாஹிதா வனவிலங்கு சரணாலயம், ஆதிலாபாத் மாவட்டம், தெலுங்கானா (130 km²)
- சட்கோசியா ஜார்ஜ் வனவிலங்கு சரணாலயம், ஒடிசா (790 km²)
- சத்புரா தேசியப் பூங்கா, மத்தியப் பிரதேசம் (490 km²)
- சிமிலிபால் தேசியப் பூங்கா, மயூர்பஞ்ச் மாவட்டம், ஒடிசா (2,550 km²))
- சத்தனடி வனவிலங்கு சரணாலயம், சத்தீசுகர் (670 km²)
- உதந்தி வனவிலங்கு சரணாலயம், சத்தீசுகர் (340 km²)
மேலும் காண்க
[தொகு]- வறண்ட வன ஆராய்ச்சி நிறுவனம் (AFRI)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eastern highlands moist deciduous forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund.
- ↑ Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002).
வெளி இணைப்புகள்
[தொகு]- "Ecoregions 2017". Resolve.
Geographical ecoregion maps and basic info.