உயர்கல்வித் துறை (இந்தியா)
Appearance
उच्च शिक्षा विभाग | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
மூல துறை | கல்வித் துறை அமைச்சகம் |
உயர்கல்வித் துறை (Department of Higher Education (India)) என்பது கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துறையாகும். இது இந்தியாவில் உயர்கல்வியை மேற்பார்வை செய்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம், 1956இன் பிரிவு 3 இன் கீழ், இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனையின்படி கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியினை வழங்க இந்தத் துறைக்கு அதிகாரம் உள்ளது.[1][2][3]
அமைப்பு
[தொகு]இந்தத் துறை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த துறையின் பெரும்பாலான பணிகள் இந்த துறையின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகின்றன.[4]
- பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி; சிறுபான்மையினர் கல்வி
- பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
- இந்தியச் சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம்
- இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகம்
- இந்தியத் தத்துவ ஆராய்ச்சி குழுமம்
- 38 மத்தியப் பல்கலைக்கழகங்கள் (இந்தியக் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம் 15.01.2009 இல் நிறுவப்பட்ட 15 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட)
- இந்திய மேம்பாட்டுக் கல்வி நிறுவனம், சிம்லா
- அகில இந்திய உயர்கல்வி ஆய்வு
- தொழில்நுட்ப கல்வி
- அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழு[5][6]
- கட்டிடக்கலை குழுமம்[7]
- 5 இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (அலகாபாத், குவாலியர், ஜபல்பூர் மற்றும் காஞ்சிபுரம், கர்னூல்)
- 23 இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள்
- 7 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- 20 இந்திய மேலாண்மை கழகங்கள்
- 31 தேசிய தொழினுட்பக் கழகங்கள் (NITகள்)
- 3 இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள்
- 4 தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
- பயிற்சி / நடைமுறை பயிற்சிக்கான 4 பிராந்திய வாரியங்கள்
- நிர்வாகம் மற்றும் மொழிகள்
- சமசுகிருத துறையில் மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய சமடுகிருதப் பல்கலைக்கழகம், புது தில்லி, சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம், புது தில்லி மற்றும் தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம், திருப்பதி
- கேந்திரிய இந்தி சன்ஸ்தான், ஆக்ரா
- ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், ஐதராபாத்
- உருது மொழி மேம்பாட்டுக்கான தேசிய குழுமம்
- சிந்தி மொழி மேம்பாட்டுக்கான தேசிய குழுமம்
- மூன்று துணை அலுவலகங்கள்: மத்திய இந்தி இயக்குநரகம், புது தில்லி; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்களுக்கான குழுமம், புது தில்லி; மற்றும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்
- தொலைதூரக் கல்வி மற்றும் உதவித்தொகை
- யுனெஸ்கோ, சர்வதேச ஒத்துழைப்பு, புத்தக விளம்பரம் மற்றும் பதிப்புரிமை, கல்விக் கொள்கை, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு
- ஒருங்கிணைந்த நிதிப் பிரிவு.
- புள்ளியியல், ஆண்டுத் திட்டம் மற்றும் உள்ளடக்க மேலாண்மை நிறுவனம்
- நிர்வாக சீர்திருத்தம், வடகிழக்கு பகுதி, பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோர்
பிற
[தொகு]- தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், புதுடில்லி.
- தேசிய புத்தக அறக்கட்டளை
- சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான குழு
- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு
- நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
- கேந்திரிய வித்யாலயா
- ஜவஹர் நவோதயா வித்தியாலயம்
- தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்
- நடுவண் திபெத்து பள்ளி நிர்வாகம்
- தேசிய ஆசிரியர் நல நிறுவனம்
- கல்வி ஆலோசனை இந்தியா நிறுவனம் (பொதுத் துறை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
- ↑ Indian Institute of Space Science and Technology (IISST) Thiruvananthapuram Declared as Deemed to be University, Ministry of Human Resource Development, Press Information Bureau, July 14, 2008
- ↑ "IIST gets deemed university status", தி இந்து, 15 July 2008, archived from the original on 18 July 2008
- ↑ ORGANIZATIONAL STRUCTURE பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Department of Higher Education website.
- ↑ Technical Education Overview பரணிடப்பட்டது 5 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம் Dept of Ed.
- ↑ National Level Councils பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2010 at the வந்தவழி இயந்திரம் Tech Ed.
- ↑ Council of Architecture website
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- உயர் கல்வித் துறை – அதிகாரப்பூர்வ இணையதளம்
- Niranjana, Tejaswini (2014). "EPW_report_Indian_Languages_in_Indian_Higher_Education" (PDF). pdf.js. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
- உயர் கல்விக்கான கடன் உதவி