இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (En: Central Institutue of Indian Languages) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வித் துறையின் கீழ் கர்நாடக மாநிலம், மைசூரில் செயல்படும் நிறுவனம் ஆகும்.[1] இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், 1981 முதல் இந்திய அரசு மொழிகள் மற்றும் சிறுபாண்மை மொழிகளின் மேம்பாட்டிற்காகவும் பயிற்றுவிக்கவும் செயல்படுகிறது.[2].
மண்டலங்கள்
[தொகு]இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் ஆய்வுப்பணிக்காக இந்நிறுவனம் இந்தியாவில் ஐந்து மண்டலங்களில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மண்டலங்களும் பயிற்றுவிக்கும் மொழிகளும்:
- தென் மண்டல மொழிகளின் மையம், மைசூர், கர்நாடக மாநிலம் : தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள்.
- கிழக்கு மண்டல மொழிகளின் மையம், புவனேசுவரம், ஒரிசா மாநிலம்: வங்காள மொழி, மைதிலி மொழி, ஒடியா மொழி மற்றும் சந்தாலி மொழிகள்.
- வட மண்டல மொழிகளின் மையம், பாட்டியாலா, பஞ்சாப் மாநிலம்: டோக்ரி, காஷ்மீரி மொழி, பஞ்சாபி மொழிமற்றும் உருது மொழிகள்.
- மேற்கு மண்டல மொழிகளின் மையம், புனே, மகாராஷ்டிர மாநிலம்: குஜராத்தி, இராஜஸ்தானி, கொங்கணி மொழி, மராத்தி மற்றும் சிந்தி மொழிகள்.
- வடகிழக்கு மண்டல மொழிகளின் மையம், குவஹாத்தி, அசாம் மாநிலம்: அசாமிய மொழி, போடா, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகள்.
மையங்கள் | மொழிகள் |
தென் மண்டலம், மானசங்கோத்ரி, மைசூர் - 570 006 | கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு |
கிழக்கு மண்டலம், லக்ஷ்மிசாகர், புவனேஷ்வர், - 751 006. | பெங்காலி, மைதிலி, ஒரியா, சந்தாளி |
வடக்கு மண்டலம், பஞ்சபி பல்கலைக்கழக வளாகம், பட்டியாலா - 147 002 | டோக்ரி, காஷ்மீரி, பஞ்சாபி, உருது |
மேற்கு மண்டலம், டேக்கான் கல்லூரி வளாகம், புனே - 411 006 | குஜராத்தி, கொங்கணி, மராத்தி, சிந்தி |
உருது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம், சப்ரூன், சோலன் - 751 006 | உருது |
உருது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம், ஜிசி/42-ஷி, விபூதி கண்ட், கோம்தி நகர், லக்னோ - 226 010 | உருது |
வடகிழக்கு மண்டலம், 3931, பெல்தோலா, கல்லூரிச் சாலை, பெல்தோலா, கோகாத்தி - 781 028 | அஸாமி, போடோ, மணிப்புரி, நேபாளி |
மையங்கள்
[தொகு]இந்திய அரசு மொழிகள் மற்றும் சிறுபாண்மை மொழிகளின் வளர்ச்சிக்காக, இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் ஏழு மையங்கள்களை நிறுவியுள்ளது:[3]
- இந்திய பாரம்பரிய மொழிகளுக்கான மையம்
- மலைவாழ் இன மொழிகள், சிறு மொழிகள், அழிவுறும் நிலையில் உள்ள மொழிகள் மற்றும் மொழிகளுக்கான கொள்கை வகுத்தல் தொடர்பான மையம்.
- இந்திய மொழிகள் தொடர்பான அகராதியியல், நாட்டுப்புறவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு தொடர்பான படிப்புகள் மையம்.
- இந்திய மொழிகளின் படிப்பறிவு தொடர்பான படிப்புகள் மையம்.
- இந்திய மொழிகளின் வளர்ச்சி தொடர்பான ஆய்வுக்கூடம் மற்றும் மதிப்பாய்வு மையம்.
- இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்தல், நூல்கள் வெளியீடு மற்றும் விற்பனை மையம்.
- அனைத்து இந்திய மொழிகளுக்கான செய்தித் தொடர்பு மையம்.
செம்மொழிகள் ஆய்வு மையம்
[தொகு]இந்நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட செம்மொழிகளை ஆய்வு செய்வதற்கு ஒரு ஆய்வு மையம் நடத்துகிறது.
இந்நிறுவனம் வழங்கும் விருதுகள்
[தொகு]சிறுபான்மை இன மக்களின் மொழி வளர்ச்சிக்காக, சிறுபான்மை இனத்தவர் எழுதிய சிறப்பான நூல்களுக்கு பாஷா பாரதி சம்மன் எனும் பெயரில் பணத்துடன் கூடிய விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்கிறது.[4]
இணையவழிக் கல்வி
[தொகு]தமிழ் மொழி, வங்காள மொழி, மற்றும் கன்னட மொழியில் இணையவழிக் கல்வி படிப்புகள் நடத்துகிறது
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Home page". Central Institute of Indian Languages. Retrieved 18 April 2013.
- ↑ "Central Institute of Indian Languages: A legend". Central Institute of Indian Languages. Retrieved 18 April 2013.
All through the last 32 years in existence, ...
- ↑ "Centres". Central Institute of Indian Languages. Retrieved 18 April 2013.
- ↑ http://www.ciil.org/aboutawards.aspx