இந்திய மேலாண்மை கழகங்கள்
இந்திய மேலாண்மை கழகங்கள் (இ.மே.க) (ஐ.ஐ.எம்), இந்தியாவிலுள்ள சிறப்பான பட்டமேற்படிப்பு மேலாண்மை பள்ளிகளாகும்.அவை மேலாண்மை கல்வி வழங்குவது, ஆய்வுகள் மேற்கொள்வதுடன் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்கி வருகின்றன. இந்திய மாணவர்களில் அறிவில் சிறந்தவர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கு உலகின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வியை அளித்து இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் சிறப்பான வழிகாட்டிடும் மேலாளர் வளத்தை அமைத்திடும் நோக்கத்துடன் இந்திய அரசு|இந்திய அரசால் இக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.[1] இ.மே.கழகங்கள் நாட்டின் தலைசிறந்த மேலாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பதுடன் உருவாகும் புதிய துறைகளிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறது.[1] இவை உலகின் தலைசிறந்த மேலாண்மை கல்விக்கூடங்களுக்கிணையாக கல்வி வழங்கல், ஆய்வுகள் மற்றும் தொழில்முறை கருத்துரைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மை பள்ளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.[2] இக்கழக முன்னாள் மாணவர்கள் உலகளவில் தமது தரத்தை நிலைநாட்டியுள்ளனர்.
அனைத்து இ.மே.கழகங்களும் நடுவண் அரசின் உடமைகளாக நிதி பெற்று முழுமையான தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன.அவை நிறுவப்பட்ட வரிசையில் அமைந்துள்ள இடங்கள்: கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, லக்னோ, கோழிக்கோடு, இந்தூர் மற்றும் சில்லாங்.இவை முதுகலை வணிக நிர்வாகம்|MBAவிற்கு இணையான பட்டமேற்படிப்பு மேலாண்மை பட்டயங்களை (PGDIM)வழங்குகின்றன. இவற்றின் பெல்லோஷிப் பட்டங்கள் முனைவர் பட்டத்திற்கிணையானவை.இவை கட்டமைக்கப்பட வணிகத்துறையன்றி பிற வணிக மற்றும் மேலாண்மை செய்யப்படாத துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயம்,ஊரக வளர்ச்சி,பொது வினியோக அமைப்பு, ஆற்றல், நலக்கல்வி, இருப்பிடங்கள் என பல்வேறு துறைகளில் முன்னேற்ற வழிகளுக்கான கருத்துரைகள் வழங்கி வருகிறது.
இந்திய மேலாண்மை கழகங்களின் அமைவிடம்
[தொகு]இந்தியா முழுவதுமுள்ள 13 இந்திய மேலாண்மை கழகங்களின் (இ.மே.க)(ஐ.ஐ.எம்) பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Technical Education". Archived from the original on 2009-01-22. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
- ↑ "The Hindu : Buzzing about a B-school". Archived from the original on 2009-11-26. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)