உள்ளடக்கத்துக்குச் செல்

இஞ்சியோன்

ஆள்கூறுகள்: 37°29′N 126°38′E / 37.483°N 126.633°E / 37.483; 126.633
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இங்கியோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இஞ்சியோன்
인천
仁川
இங்கோன், இன் சுன்
பெருநகரப் பகுதி
கொரியப் பெயர் transcription(s)
 • அங்குல்인천광역시
 • ஹஞ்சா仁川廣域市
 • உரோமானிய எழுத்துருவில்Incheon Gwang-yeoksi
 • மெக்குன்-ரீச்சௌர்Inch'ŏn Kwang'yŏkshi
கொரியப் பெயர் சிறுவடிவில் transcription(s)
 • அங்குல்인천
 • உரோமானிய எழுத்துருவில்Incheon
 • மெக்குன்-ரீச்சௌர்Inch'ŏn
Map of தென்கொரியா வின் வரைபடத்தில் இஞ்சியோன் அமைவிடம்
Map of தென்கொரியா வின் வரைபடத்தில் இஞ்சியோன் அமைவிடம்
நாடுதென்கொரியா
கொரிய மண்டலம்சியோல் தேசிய தலைநகர்ப் பகுதி (சுடோக்வன்)
நிறுவப்பட்டது1883 - கெமுல்போ என்று
நிர்வாகப் பிரிவுகள்
பட்டியல்
அரசு
 • வகைபெருநகரம்
 • மேயர்சாங் யங்-கில்
 • அவைத் தலைவர்கிம் கி-சின்
பரப்பளவு
 • மொத்தம்1,029.16 km2 (397.36 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்27,75,645
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
நேர வலயம்ஒசநே+9 (கொரியா சீர்தர நேரம்)
கொரிய மொழி வகைகள்சயோல் பாணி
மலர்ரோஜா
மரம்துலிப் மரம்
பறவைநாரை
இணையதளம்incheon.go.kr (ஆங்கிலம்)

இஞ்சியோன் பெருநகரம் (Incheon Metropolitan City) கொரியாவின் வடமேற்கில் அமைந்துள்ளது. 1883ஆம் ஆண்டு கெமுல்போ துறைமுகம் கட்டப்பட்டபோது நகரில் 4700 நபர்களே இருந்தனர். இன்று அதுவே 2.76 மில்லியன் மக்கள்தொகை உள்ள பெருநகரமாக வளர்ந்து கொரியாவின் சியோல் மற்றும் புசானை அடுத்து மூன்றாவது பெருநகரமாக விளங்குகிறது. துறைமுக நகராக இருக்கும் வசதியால் கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் இந்த நகரமும் அண்மைக்காலங்களில் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இஞ்சியோன் துறைமுகம் 2003ஆம் ஆண்டில் கொரியாவின் முதல் திறந்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அது முதல் பல உள்நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தப் பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்துள்ளன. சாம்சங் நிறுவனம் தனது உயிரியல் தொழில் முனைவிற்கு சாங்டோ பன்னாட்டு நகரை மையமாகக் கொண்டுள்ளது.

ஓர் பன்னாட்டு நகரமாக இங்கு 2009 இஞ்சியோன் உலக சந்தை மற்றும் விழா போன்ற பல பெரும் பன்னாட்டு மாநாடுகளும் கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. பதினேழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு செப்டம்பர் 19, 2014 முதல் நடைபெற உள்ளன. உலகின் பல பகுதிகளையும் வடகிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் மையமாக இஞ்சியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் இஞ்சியோன் துறைமுகம் விளங்குகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சியோன்&oldid=3611544" இலிருந்து மீள்விக்கப்பட்டது