முன்னர் ஆஸ்திரலேசியா என்பது ஆஸ்திரேலியா/நியூசிலாந்து கூட்டு விளையாட்டு அணிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1905 முதல் 1915 வரையான காலப்பகுதியில் டேவிஸ் கிண்ணடென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் சிறப்பு வீரர்கள் கூட்டாகப் பங்குபற்றி 1907, 1908, 1909, 1911, 1914 போட்டிகளில் வெற்றி பெற்றனர். மேலும் 1908, 1912 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் கூட்டாகப் பங்குபற்றினர். ஆஸ்திரலேசிய அணி 1911 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த பேரரசின் விழாவிலும் பங்குபற்றியிருந்தது.[1][2][3]